பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்

தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தை வாரி வழங்கப் போகின்றன. மின்னணு கழிவுகளை எல்லாம், பணம் கொடுத்து வாங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 'கிளீன் கேரளா கம்பெனி லிமிடெட்' என்ற, மாநில அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து, இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, பணம் கொடுத்து வாங்கப்படும், இந்தக் கழிவுகள், பாலக்காட்டை சேர்ந்த, 'எர்த் சென்ஸ் ரீசைக்கிள்' என்ற, தனியார் நிறுவனத்திடம், அது ஒப்படைக்கப்படும்.

அந்த நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள தங்கள் தொழிற்சாலையில், இந்த மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றும்.

மின்னணு கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், வேண்டாம் என, ஓரங்கட்டப்பட்ட கம்ப்யூட்டர்கள், 'டிவி'க்கள், மொபைல் போன்கள், ரேடியோக்கள், குளிர்

சாதன பெட்டிகள், கிரைண்டர்கள், டியூப் லைட்கள், சிஎப்எல் விளக்குகள் உட்பட, பல வித பொருட்கள், கிலோ ஐந்து ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி