6–ந்தேதி பக்ரீத் பண்டிகை: தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

6–ந்தேதி பக்ரீத் பண்டிகை: தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு.


பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை.
இதனால் பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறைதேதியை மாற்றி அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில், பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி (திங்கட்கிழமை) மாற்றி விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மேலும் ஒருநாள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை, 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விஜயதசமி பண்டிக்கான விடுமுறையாகும். தொடர்ந்து 4 மற்றும் 5–ந்தேதி சனி ஞாயிறு வழக்கமான விடுமுறையாகும். தற்போது 6–ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி