80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு. Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2014

80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு. Dinakaran News


தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதன்மூலம் குறைந்தபட்சம், ரூ.1800 முதல் அதிகபட்சம்
ரூ.9,900 வரை ஊதியம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 80 ஆயிரம் பேர் சாதாரண நிலை ஊதியம் (5200&20200&ஜிபி 2800) பெற்று வருகின்றனர்.தமிழ்நாட்டில் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800 = 8000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200=13500 என வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கிட 2010ல் ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழுவும், 2012ல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 நபர் குழுவும் அமைக்கப்பட்டது. ஆயினும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அனைத்து ஆசிரியர் சங்கம் பல்வேறு ஆதாரங்களை சேகரித்து ஊதிய மாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பலருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அந்த ஆதாரங்கள் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் ஊதியம் ரூ.9,300&34,800 தர ஊதியம் 4200 என மாற்றம் செய்திட உத்தரவிடக் கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குப் பின்னர், தற்போது, 8 வாரத்திற்குள் ஊதியத்தில் உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.


இந்த தீர்ப்பின்படி ஊதியம் மாற்றம் செய்யப்பட்டால், 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழில் கல்வி ஆசிரியர்கள் பயன் பெறுவர். மேலும் 1999 முதல் 2005 வரை நியமனம் பெற்றவர்களுக்கு ரூ,1800ம், 2006 முதல் 2009 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.3740ம், 1.6.2009க்குள் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9890ம் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிப்சன் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அடுத்த வாரம் எங்கள் குருகுல வலைதளத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெற இருக்கிறது., தேர்வுக்குரிய பாடப்பகுதி 6ம் வகுப்பு 7ம் வகுப்பு வரலாறு முழுவதும், சனி அன்று தேர்வு நடைபெறும், Tet and tnpsc தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் அனைவரும் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  2. சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.

    கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
  3. Ithu enna shivaraj sitha vaithiyavsaalaiya. 7 thalamuraikum neengathan supreme court lawyer aa. Veru engum kilaihal kidaiyathaaa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி