மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி.


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரியவைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சிலர் நன்கு படிப்பர். ஆனால் கூச்ச சுபாவத்துடன் இருப்பர். சில மாணவர்கள் ஆங்கிலம் நன்கு படிப்பர் ஆனால் தமிழ் இலக்கணத்தில் திணறுவர். சிலருக்கு கணிதம் புரியாது. இது போன்ற குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட பாடத்தில் புரியாத பகுதியை புரிய வைக்க வேண்டும். இதை எளிமையான நடைமுறையில் கையாண்ட வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு பகுதியாக ஆராய்ச்சி கட்டுரை போல் எழுதி டிச., மாதத்திற்குள் சமர்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட தலைப்பில் செயல் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிப்பர். இதன் அடிப்படையில் வரும் காலங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி