9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.


கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.21,600 ஆக உயர்த்தி உடனே வழங்கவேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களை போன்று கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவேண்டும்,
காலியாக உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ப.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மாலையில் மத்திய அரசு மகாசம்மேளன பொதுச்செயலர் துரைபாண்டியன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி