அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2014

அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு.


மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர்பணிக்கான போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, செப்., 27ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்தில், அசாதாரண சூழல் ஏற்பட்டதால், அடுத்த நாள் நடக்க இருந்த போட்டித் தேர்வு, தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், நேற்று நடத்தியது. சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளி, அரும்பாக்கம் அண்ணா ஆதர்ஷ் கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி என, மூன்று தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை நடந்த தேர்வில், 5,650 பேர் வரை பங்கேற்றனர்.விண்ணப்பித்தோரில், 90 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறினர்.க

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி