இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2014

இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?


கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக, பள்ளிகளுக்கு, இந்த வாரம் முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி, தீபாவளி பண்டிகை.
நாளை மறுநாள், 23ம் தேதி, பெண்கள் நோன்பு இருந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வர். இதனால், பல தனியார் பள்ளிகளில், ஏற்கனவே, தொடர்ந்து, இரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், கனமழை காரணமாக, நேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'தொடர்ந்து, மேலும், இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை அறிவிப்பதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. வாரத்தின் கடைசி நாளானவெள்ளிக்கிழமை அன்று, மழை வந்தாலும், வராவிட்டாலும், அன்றைக்கும், விடுமுறை அறிவித்து விட்டு, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின், 27ம் தேதி முதல், பள்ளியை திறக்க, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

எனவே, இந்த வாரம் முழுவதும், மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்!

3 comments:

  1. Kalviseithi Nanbarkalukku Happy Diwali.

    ReplyDelete
  2. அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி