மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :


மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :(MADRAS EYE- CONJUNCTIVITIS-FACTS& PREVENTION)
Reactions:

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

அன்பார்ந்த சகோதரர் சகோதிரிகளே !
தற்போது நிறைய ஊர்களில் மெட்ராஸ் ஐ பரவி உள்ளது என்று
கேள்வி படுகிறோம் அதற்கு முன் ஏச்சரிக்கை எவ்வாறு எடுப்பது
என்ற விபரங்கள் தெரிந்து பயன்பெறுவோம்!!!! மற்றவர்களுக்கும்
பகிர்துகொள்ளுங்கள்!!!

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது .அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம் .

இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான , ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது .

இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர் ) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி ஆகும் .

கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.
ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது

கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனை படி போடவேண்டும் .

கண்களை கசக்க கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி steroid சொட்டு மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே சுய மருத்துவம் செய்வதற்கு சும்மா இருப்பதே மேல் . ஏனெனில் இது தானாகவே சரி ஆகிவிடும் (self limiting ).
உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5 முதல் 7 நாட்களில் இது குணமடையும் .


குறிப்பு: தாங்கள் தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த முயற்சியுங்கள் !!!!

2 comments:

  1. Elaneer.moer satham. Neerakaram sapidalam. Nallaemnai two drops kannuku vidalam

    ReplyDelete
  2. எங்க ஆபிஸில் ஒர்க் பண்ற 2 பேருக்கு வந்திருப்பதாக தகவல், ஒரே அறையில் வேலை செய்கிறோம். இன்று அவர்களுக்கு விடுமுறை. நாளை முதல் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது. யாராவது ஆலோசனை சொல்லவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி