கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம்.


கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஏற்படும், 'டிஸ்லெக்சியா' பாதிப்புக்கு, பொதுத்தேர்வின் போது சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக, துவக்க கல்வி நிலையிலே, மாணவர்களின் நடவடிக்கையை கண்காணித்து, பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மூளை நரம்புகளின் இயக்க கோளாறால் ஏற்படும் நோய் டிஸ்லெக்சியா. இது, மூளையின் செயல்திறன் குறைவால், பார்ப்பது, கேட்பது, கற்பது உள்ளிட்ட சாதாரண நிகழ்வுகளில் கூட, குழந்தைகளின் மூளைத் திறனை மந்தமடைய செய்கிறது. இப்பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, சொற்களை புரிந்து கொள்ளும் திறன், எழுத்துகள் உச்சரிப்பு, எண்களின் மதிப்பு என எல்லாவற்றிலும், மாறுபட்ட உள்வாங்கி கொள்ளும் தன்மையே இருக்கும்.குறிப்பாக, குழந்தைகளின் அடிப்படை கற்றல் வயதான, 3 முதல் ௮ வயதுக்குட்பட்ட நிலையிலே, டிஸ்லெக்சியா பாதிப்பை கண்டறிய முடியும். இருப்பினும் பெரும்பாலானோர், வளர்ச்சி முதிர்வில் சரியாகிவிடும் என, நினைத்து சிகிச்சைக்கு செல்வதில்லை.பாதிப்புள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் ஒரே சலுகை, பொதுத் தேர்வின் போது, கூடுதல் நேரம் ஒதுக்குவதும், பிரத்யேக ஆசிரியர் உதவியுடன் தேர்வை எதிர்கொள்ளுதல் மற்றும் மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே எழுதுவதற்கு அனுமதி மட்டுமே.

இச்சலுகையால், மாணவர்களது கல்வித்தரம் உயரவோ அல்லது, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்போ மிகக்குறைவு. எனவே, ஆரம்ப கல்வியிலே கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் நிலையை ஆய்வு செய்து, பிரத்யேக பயிற்சிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, ''கோவையை பொறுத்தவரை, ஆண்டுதோறும் பொதுத்தேர்வின் போது, குறைபாடுள்ள மாணவர்களுக்கான சலுகை குறித்து, பள்ளிகளில் தகவல் அளிக்கப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும், டிஸ்லெக்சியா குறைபாடுடன் தேர்வெழுதிய 28 பேரில், 12 பேர் அரசு பள்ளி மாணவர்கள். இது, ஆரம்ப கட்டத்திலே சிகிச்சை அளிக்க வேண்டிய பிரச்னை தான். இருப்பினும், 10 மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், காலாண்டு தேர்வின்போதே, பின்தங்கிய மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, பயிற்சி அளிக்க, ஏற்பாடு செய்யப்படுகிறது,'' என்றார்.'விழிப்புணர்வு இல்லை'மனநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''டிஸ்லெக்சியா குறைபாடு குறித்து, பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.

சாதாரண குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து மாறுபடும்போதே, சிகிச்சை அளிக்க எவரும் முன்வருவதில்லை. முதிர்ச்சியடைந்த நிலையிலான சிகிச்சையின் வாயிலாக, உடனடி பலனை பெற முடியாது. தவிர, டிஸ்லெக்சியாவை பொறுத்தவரை, நோயின் வீரியம் பொதுவானதல்ல; தொடர் பயிற்சி, மூளைக்கு சிந்திக்கும் வேலைஆகியவற்றை சிகிச்சை வாயிலாக அளிப்பதன் மூலம், நல்ல முன்னேற்றத்தை காண முடியும். இதற்கு, மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்,'' என்றார்.

1 comment:

 1. உதவுங்கள் ....
  மிக மனவேதனைய்யுடன் இதை. பகிர்கிறோம் ....
  நாங்கள். 2000. மேற்பட்ட. பட்டதாரி. ஆசிரியர்கள். கடந்த 2011 டிசம்பர். மாதம் பணியில் சேர்ந்தோம் .....எங்களுக்கு. சான்றிதழ். சரிபார்ப்பு. நவம்பர். 2010 .டிசம்பர். 2010 மற்றும். பிப்பரவரி. 2011 லவ் நடந்தது .....
  எங்களுக்கு. பணி. 2009-2010 காலி பணியிடத்தை. காட்டியும். எங்களை. தேர்ந்தெடுக்க அரசாணை. 152/153 தேதி. 3-06-2010 அன்று. வழங்கப்பட்டுள்ளது ....

  ஆனால் 23-08-2010 க்கு முன்னர் சான்றிதழ். சரிபார்த்தவர்கள் மட்டுமே. TET. லிறுந்து. விளக்கு அளிக்கபட்டுள்ளது்.

  ஆனால் நவம்பர். 2010 ல. சான்றிதழ். சரிபார்க்கப்பட்டு ங செப்டம்பர். ல. பணியமர்த்தப்பட்ட. பல். பேருக்கு. தகுதிகாண் பருவம். முடிக்கபட்டுள்ளது .......ஆனால். எங்களுக்கு. எந்த பயனும் இல்லை ...
  மனவேதனை யுடன் ....இருக்கிறோம் .......
  நாங்கள். என்ன செய்வது ????
  தொடர் பிற்கு. 9962228283
  FB Jaya Venkat....my team (CVS after Aug 2010 appointed teachets)..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி