ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல் :அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல் :அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.


விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மாற்றுத்திறனாளியான நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன். மேலும், தகுதி தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றுள்ளேன். தேர்வாணையம் இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. நானும் சென்றேன். வேலை கிடைக்கும் என காத்திருந்தேன்.

இதனிடையே, ஆதிதிராவிடர் நலத்துறையில்உள்ள 669 காலி பணியிடங்களை, அவர்களை கொண்டே நிரப்ப அறிவிப்பாணை வெளி வந்ததாகவும், வேறு காலி பணியிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 காலி பணியிடங்களும் இடஒதுக்கீட்டு முறையில், ஆதிதிராவிடர்களை மட்டும் நியமிக்க வேண்டும்என கூறப்படவில்லை.

தகுதித் தேர்வில் 64.47 மதிப்பெண் பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியிருந்தால் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்கும்.எனவே, 669 பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ‘பணி நியமன முறையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இம்மனுவிற்கு அரசு தரப்பில் பதில் மனு 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

4 comments:

  1. Hello sir, 2014_15 ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எவ்வித அறிவிப்பையும் இதுவரை இந்த அரசு வெளியிடவில்லை ,இனியாவது அதற்கான அறிவிப்பு வெளியாகுமா?????????? இதை பற்றிய தகவல் இருப்பின் தயவு செய்து பதிலளிக்கவும்

    ReplyDelete
  2. may be this month end or dicember calfer varalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி