இன்று அப்துல் கலாம் பிறந்த தினம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2014

இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்.


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை,
சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

16 comments:

  1. தூய்மையான தமிழனின் கவுரவத்திற்கு தலைவணங்குகிறேன்.
    இவரைப்போல திறமையான ஆனால் மிகவும் எளிமையான உலகம் போற்றும் நாயகனைப்போல் புதிய ஆசிரிய நண்பர்களே நீங்களும் உங்கள் மாணவர்களை உருவாக்குங்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Vijai sir pls send ur mobile no

      Delete
    2. உண்மை திரு விஜய் அவர்களே
      இன்றைய சமுதாயம் இவரை போல இருக்க வேண்டும்

      Delete
    3. mr ramar case pathi kavalai padathirkal kandippa avaka ninaikurathu nadakkathu

      mr ramar enkindra sokothararai payanpaduthi veru sila sokothararkal palan adaiyalam endru pakal kanavu kankirarkal athu nadakkathu nadakka vida mattom

      avarkalukku , sila nanbarkal samuka anithiyai patdri pesukirarkal avarkalukkuum sila unmaikalai therivikkiren


      yar manathaiyum pun paduttha vendum enpathu en nokkam alla anal unmaiyai na solla vendum alllava athan


      kadantha 2012 tet exam details ethu thakaval ariyum urimai sattam 2005 moolam nan vankiya thakaval


      2012 paniyamarthiya cast variyana detail FOR PAPER 1


      BC 5179

      MBC 2728

      OC 294

      SC 1382

      SCA 174

      ST 23


      2012 PAPER 2 CASR WISE DETAIL

      BC 7994

      MBC 2171

      OC 429

      SC 898

      SCA 95

      ST 8


      OK ethula enna problam na tn gov eda othikkidi detail

      bc 29%

      mbc 21%

      sc 18 %

      st 1 % total 69 % balance 31% gendral



      ok va 2012 la paper 1 ku seniority padi posting pottanka apdi erukayila sc and mbc ku en gendral la anupala

      sc 18 % nala 1556 select pannitu balance 350 back veconcy ya entha year fill pannanka appo genaral 31 % en sc condidate ku vaippu tharala


      athu pola mbc ku 2728 posting potanka so avankalayum en general la anupala
      bc mattum epdi 5179 per select ananka 31 % nalum 10000 (approx )posting padi pathalum (3000) thane varanum eppdi 5179 ethu enakku puriyala weightage appo pakkala only senniority so general la en avankala mattum anu punanaka


      ethan samuka neethiya

      appolam samuka neethi kannukku thariyala eppa mattum sc 669 posting arivichudankanu samuka neethi kannuku theriyuthu sila sakotharakalukku athan enaku puriya


      ennu erukku wait pannunka adutha commentil pathividukiren enathu makkumuralai

      Delete
    4. k kk apram antha adw la 669 posting kukke epdi vayithha eriyuthe TAMIL NATTULA SC KKU

      mattum anaithu thuraikalilum nirappa padamal erukum 36784 (thorayamaka )( ennum

      athikamaka kuda erukalam) erukkum pinnadaivu kali paniyidam erukirathu

      melum athai ennum 6 month kullu nirappa vendum endru NEETHI MANDRAM thamilaka arasai

      kandithullathe athavathu theriyuma eppadiyum athai ennum 6 month kulla nirappa porankale

      appo enna panna porinka pakkalam

      Delete
  2. IM ABDULKALAM COLLEGE MATE IM VERY PROUD TO STUDIED THAT COLLEGE

    ReplyDelete
  3. IM VERY PROUD TO JOSEPHITE TRICHY

    ReplyDelete
  4. hai friends with pleasure i am selected

    ReplyDelete
  5. select aana anaithu nanbargalukku ennodaya vaalthukal

    ReplyDelete
  6. if anybody know about counciling please reple me friends

    ReplyDelete
  7. adw schools sg final list eppa vituvanga sir

    ReplyDelete
  8. நான் கடைசி வாய்ப்பில் CV யில் கலந்து கொண்டேன் எனக்கு தகுதிச் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை . எப்போது கிடைக்கும் யாராவது தெரிந்தால் சொல்லவும் நண்பர்களே.

    ReplyDelete
  9. ama antha nodification la BC & MBC 64 postinkku arivippu vanthathu athula 64

    postinkum only for PIRANMALI KALLAR KU MATTUM nu potturunthathe athu

    evanka kannukku theriyalaya ella athula namakku kettalum tharamattankanu kekkalaya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி