தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.


தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு விவரங்கள்அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினிபயிற்றுனர் பணி காலியிடத்திற்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்துக்கு பி.எட்., கல்வி தகுதியுடன் பி.இ., கணினி அறிவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். வயது வரம்பு 1.7.2014 அன்று 18 வயது முதல் 57 வயதுக்குஉட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மேலும், விவரங்களை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்புக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும் வருகிற 3ம் தேதிக்குள் சென்னை கிண்டி தொழிற்பேட்டை, தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய பரிந்துரைத்தல் விவரங்களை நேரில் சரிபார்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி