பிஇ, பிடெக், கேள்வித்தாளில் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

பிஇ, பிடெக், கேள்வித்தாளில் மாற்றம்.


அண்ணா பல்கலைக்கழகம் பிஇ, பிடெக் மாணவர்களின் கேள்வித்தாளில்மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பொறியியல் படிக்கும் மாணவ&மாணவிகளுக்கு தற்போது வழங்கப்படும் தேர்வுக்கான கேள்விதாளில்100 சதவீதம் கேள்விகள் “சப்ஜட்டிவ்“ கேள்விகளாக உள்ளன.
இதனால்,மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்து தேர்வு எழுதிவிடுகின்றனர். இதனால் பொறியியல் படிப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கே வேலைவாய்ப்பு கிடைப்பதாக ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக, தேர்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் கேள்விதாளில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், பெரும்பாலானோர் கேள்வித்தாள்முறையில் மாற்றம் கொண்டுவர அறிவுறுத்தினர்.

இதைதொடர்ந்து துணைவேந்தர் மற்றும் நிர்வாகிகள், கேள்விதாளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொறியியல் தேர்வுகளில் தற்போது 100 சதவீதம் பெரிய கேள்விகளே (சப்ஜட்டிவ்) கேட்கப்படுகிறது. இதற்கு பதிலாக 60 சதவீதம் சப்ஜட்டிவ் கேள்விகளும், 40 சதவீதம் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் கேள்விகளும் (மல்டிப்பிள் சாய்ஸ்) கேட்கப்படும் விதமாக வினா தாள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை ஒழிக்கப்படும். மேலும், மாணவர்கள் அதிக புத்தகங்களை ஆராய்ந்து படிக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் கல்வியறிவு வளர்ச்சியடையும்“ என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி