ஒழிகிறதா காங்கிரஸ்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

ஒழிகிறதா காங்கிரஸ்?

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாநிலங்களுக்கு உண்டான சட்டமன்றத் தேர்தலோ கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சோனியாகாந்தி தலமையிலான அகில இந்திய காங்கிரஸ்.

உதாரணம்:டெல்லி , ராஜஸ்தான், மத்தியபிரதேசம்,உத்தரபிரதேசம் போன்றவற்றின் சட்டமன்றத்தேர்தல். இந்திய நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சமீபத்திய  ஹரியானா &மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல்கள்.

மேற்கண்டவற்றில்  UP,MP யைத் தவிர மற்றவற்றில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து 1970 கள் வரை மத்தியில் பலமான எதிர்க்கட்சியும் பல மாநிலங்களில் காங்கிரஸ் மட்டுமே அரசியல் கட்சியாகவும் காட்சியளித்த காங்கிரஸ்  இப்பொழுது  மத்தியிலும் மாநிலத்திலும் தொடர் தோல்வியைத் தழுவ யார் காரணம்? எது காராணம்?

வாக்களிக்கும் மக்களா? அல்லது இந்திய தேசிய காங்கிரஸை வழி நடத்தும் தலைவர்களா?

சற்று நிதமானமாக யோசித்தால் மேற்கூறிய இருவருமே காரணங்களாக இருப்பத்தை அறிய முடியும்.அதாவது காங்கிரஸை வழி நடத்தும் செல்லும் தலைவர்கள் செய்த பிழை காரணமாக மக்கள் அளித்த மாற்று மாற்று ஓட்டே காங்கிரஸை மீளமுடியாத படுகுழியில் தள்ளயிருப்பதற்கு காரணம்.

காங்கிரஸ் வளர,வாழ வேண்டுமானால், முதலில் நேரு குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஆகும் நிலை ஒழிக்கப்பட வேண்டும்.

"40 வயதை கடந்து விட்டதால் ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதி வந்துவிட்டது" என்று அறிக்கை விடுகிறார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் மற்றும் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்.

எத்தனை முட்டாள்தனான அறிக்கை இது! இந்த முட்டாள்தனமான அறிக்கையை பிரபல ஊடங்கங்களுக்குப் பேட்டியளிக்கும் பொழுது அவ்வளவு பெருமை பொங்க சொல்கிறார் திக்விஜய் சிங்.

இந்தியாவில் ராகூல்  காந்தி மட்டும்தான் 40 வயதை கடந்திருக்கிறாரா? என் கிராமத்தின் குப்பனும் சுப்பனும் கூடத்தான் 40 வயதைக் கடந்திருக்கிறார்கள்.அவர்களது பெயரையும் பிரதமர் பதவிக்கு முன்மொழிவாரா திக்விஜய் சிங்?

"காக்கா பிடித்தல் " என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் திக்விஜய் சிங்கின் செயலையும் பேச்சையும் தொடர்ந்து கேட்டாலே தெளிவாகப் புரியும்.

காங்கிரஸின் மூத்தத்தலைவர்கள் பலரும் காமக் கொடூரர்களோ என்ற சந்தேகம் எழத் தோன்றுகிறது.கீழ்க்காணும் செய்திகள் அதற்கு விளக்கமளிக்கும்.

தடியைப் பிடித்து நடக்க வேண்டிய வயதில் தாவணியை பிடித்து இழுத்த திக்விஜய் சிங்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட  மத்தியப்பிரதேச பெண் MP ஒருவரை press meeting பொழுதே "she is so hot" என்று mic இல் பேசுகிறார். பொது மக்களும் ஊடகத்துறை நபர்களும் ஆச்சர்யத்துடனும் முக சுழிப்புடனும் திக்விஜய் சிங்கை பார்க்க, சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு எதையோ சொல்லி சமாளித்தார்.

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்திருந்த காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவர் என்‌.டி திவாரி  இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சி இணையத்தில் வெளியானது.அதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக ரோஹித் சேகர் என்பவர் நான் திவாரியின் மகன் என்றுக் கூறிக் கொண்டு நீதிமன்றப்படியேறி இறுதியில் வெற்றியும் பெற்றார்.அதன் பின்பு தனது 88 வது வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.


இன்னும் சில காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் மீது ஓரினச்சேர்க்கை மற்றும் கற்பழிப்பு  புகார்கள் வெளியானது.

ஒரு நாளைக்கு ஒரு இந்தியக் குடிமகன் 33 ரூபாய் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரமாட்டார் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது காங்கிரஸ் ஆட்சியின் நிரந்தர திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருந்த மான்டேக்சிங் அலுவாலியா குறிப்பிட்டார்.

 33 ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைப் போன்ற நகரங்களில் ஒரு கோப்பை பழச்சாறைக் கூட குடிக்க முடியாது என்பதையாவது அலுவாலியா அறிவாரா? ஒருவேளை அதை அறிந்திருந்திருந்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவீத அளவில் உள்ளது என்பது போன்ற பொய்யான,போலியான புள்ளி விவரத்தை உருவாக்க முற்பட்டாரா?

1990 களில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த மன்மோஹன் சிங் அறிமுகப்படுத்தினார்.நான் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய பொருளாராதாரக் கொள்கையால் அந்நிய முதலீடும்,அயல் நாட்டின் மூலம் பெருத்த வருமானமும் வரும் என்றும் காரணம் கற்பித்தார்.சில நேரங்களில் அது உண்மையானாலும் பல இடங்களில் அது பொய்த்தும் இருக்கிறது.

எகா. பல்வேறு சலுகைகளை அனுபவித்து ஆயிரங்கங்கணக்கான கோடிகளை சம்பாதித்துக் கொண்ட பின்பு  பல நூறு கோடிகளை மத்திய மாநில அரசுகளுக்கு வரி ஏய்ப்பு செய்த கையோடு ஊரை விட்டே காலி செய்திருக்கும் Nokia தொழிற்சாலை.

இதுவரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பிரதமர்களில் நேரு மட்டுமே அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார்.மவுண்ட் பேட்டன் பிரபு மனைவிக்கும் நேருவிற்கும் தகாத உறவு இருந்தது போன்ற சர்ச்சைகள் வெளியானாலும் அது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவருடைய தனி வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.

இந்திராகாந்தி என்ற என்ற பெயருக்கு மற்றொரு பொருள் சர்ச்சை என்று பொருள் கொள்ளலாம்.அந்த அளவிற்கு அவரது அரசியல் வாழ்க்கை சர்ச்சை நிறைந்தது.அவர் பிரதமர் ஆனதே பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.அது முதல் அவரது மரணம் வரை அந்த சர்ச்சை தொடர்ந்தது.இதற்கிடையில் நெருக்கடி நிலை பிரகடனம்,மிசா சட்டம், கச்சத்தீவு தாரை வார்ப்பு என பல சர்ச்சைகளை சொல்லலாம்.

எந்த ஒரு நாடும் தன் பலத்தைப் பயன்படுத்தி தன் நாட்டின்  எல்லைகளை விஸ்தரிக்கவே விரும்பும். எகா சீனாவின் திபெத் நாட்டின் மீதான  ஆக்கிரமிப்பு, அருணாச்சலப்பிரதேச ஆக்கிரமிப்பு.ஆனால் இலங்கையை விட பல வகையிலும் பல மடங்கு பலம் வாய்ந்த இந்தியா மட்டும் தன் நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியை தும்மாத்துண்டு குட்டி நாட்டிற்கு இனாமாகக் கொடுத்து அதனுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்னவோ?



ஆவியிடம் பேசும் நபர்களிடம் சென்று இந்திராகாந்தி ஆவியிடம் பேசினால் கச்சத்தீவை தாரை வார்த்தற்கான காரணம்  21 ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்குத் தெரிய வருமா?

"மிக அமைதியானவர்" என்ற  அடைமொழியுடன் பிரதமரான ராஜிவ்காந்தியும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி அதை திறமையாக கையாளாத காரணத்தினால் இலங்கை ராணுவ வீரரிடம் துப்பாக்கியால் அடி வாங்கிய பின்பு நாடு திரும்பினார்.இந்த விவகாரமே இறுதியில் அவரை மரணம் வரை கூட்டிச் சென்றது மறுக்க முடியாத உண்மை.இதற்கிடையில் அவர் போபர்ஸ் ஊழலில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

1885 இல் தோன்றிய, 1 1/4 நூற்றாண்டை முழுமையாகக் கடந்த காங்கிரஸ் இந்தியாவின் பாரம்பரிய,முதல் கட்சி.இந்தியா சுதந்திரம் அடைய அரும்பாடு பட்ட கட்சி.புத்தன்,ஏசு வரிசையில் இடம் பெற்ற தேசத்தந்தை காந்தியடிகள் தலைமை தாங்கி வழி நடத்திய கட்சி.இன்னும் பல பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிபட்ட கட்சியை குறித்து "ஒழிக்கிறதா காங்கிரஸ்?" என்று தலைப்பு வைத்து Article எழுதவும்,ஒழிய வேண்டும் என்று ஒரு சராசரி இந்தியனின் மனதில் தோன்றவும் என்ன காரணம் என்பதை இதைப் படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஒரு அரசு ஆசிரியராக எழுத முடியாததும்,எழுதக் கூடாததும் ஏகப்பட்டவை இருக்கிறது.அதனால் அதை தவிர்க்கிறேன்.

உண்மையில் இந்த Article இரண்டு நாட்களுக்கு முன்பே மகாராஷ்டிரா,ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே வெளியாகியிருக்க வேண்டியது.ஆனால் நேரமின்மை காரணமாக முழுமை பெறாமல் இருந்தது.

இன்று தீபாவளித் திருநாள்.நரகாசூரன் ஒழிந்த நாள்.காங்கிரஸின் இதே நிலை தொடர்ந்தால் நரகாசூரனைப் போல் காங்கிரசும் விரைவில் ஒழிய வேண்டும் என்பதே உலக விவரங்களை ஓரளவு அறிந்த சராசரி இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பு.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



அன்புடன்.
மணியரசன்.

14 comments:

  1. எங்களை ஒழித்து இந்த பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் செய்த அந்த அரக்கர்கள் அழியும் நாளே எங்களுக்கு தீபாவளி. அவர்கள் ஒழிவாா்களா???

    ReplyDelete
    Replies
    1. Nermayaga kastappattu Anaithu +2.UG.BED TET paditthu tharpoluthu theirvagi erukkum Anaithu TEACHER Anaivarukkum DIWALI Valthukkal bee happy enjoy Ha ha ha ha ha

      Delete
    2. சுயநல அரசியல்வாதிகள் அரக்கர்களோடு அழியட்டும்

      Delete
    3. suyanala vathigal (Arakkarerkel)endrudan Alinthu pogattum

      Delete
  2. Happy Diwali to Kaliviseithi Friends.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை

    ReplyDelete
  4. குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் சராசரி இந்திய குடிமகன் உயரதிகாரங்களுக்கு வரவேண்டும்.என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  5. district to other district transfer pls contact rajarajacholan@gmail.com

    ReplyDelete
  6. நண்பா் மணியரசன் அவர்களே,
    மிக மிக அழகாக காங்கிரஸ் கட்சியினரின் பொய்த் தோற்றத்தின் தோலை உரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தமிழ் நாட்டிலேயே தரங்கெட்ட, மானங்கெட்டவா்கள் எல்லாம் ஆட்சி செய்து, தன் சுயநலத்திற்காக மக்களின் ஆட்கொல்லி நோயாக திகழ்பவா்களின்
    முகத்திரையை கிழிக்கப் போவது எப்போது ? நீங்கள் உங்கள் கண்ணுக்கு எதிரே நடமாடும் அனைத்து குற்றவாளிகளின் முகத்திரையை கிழித்து மிக விரைவில் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,

      இந்த சமூகத்தின் மீதான எனது அக்கறையை என் சூழ்நிலைக்குத் தகுந்த வடிவில் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன்.

      இறைவன் அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்குவான் என திடமாக நம்புகிறேன்.

      Delete
  7. Mani sir I have received 5 days salary Rs.4691. On 20th this month. Thank GOD

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் போடல சார்

      Delete
  8. very good news.me tooooooooo!!!

    I thank God!! thank my friends!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி