பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2014

பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'


அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையைஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அக்., 2ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், கொடுத்து மகிழும் வாரம் கொண்டாட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்துமாறு, பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தங்கள் மனங்கவர்ந்த ஆசிரியர்களின் பணியை பாராட்டி, நன்றியோடு, கட்டுரை எழுதலாம்.

மாணவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு, தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம் என்பன உட்பட பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 6ம் தேதி வரை, காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்., இரண்டாவது வாரம், 'கொடுத்து மகிழும் வாரம்', பள்ளிகளில் கடைபிடிக்கப்பட உள்ளது. பள்ளிகளில்கொண்டாடப்பட்ட விபரத்தை, பள்ளி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 comments:

 1. ------------------------------
  ஓர் எச்சரிக்கை செய்தி! -- சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்வதின் பலன்!
  ------------------------------
  இன்று ஒரு மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு அமைதி நிலவுகிறது. இப்பொழுது சிலர் அடுத்த கட்ட விளையாட்டுக்கு(வழக்கு தொடர) ரெடியாகிறார்கள். பலர் அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துகொண்டும் யாருக்காவது போன் செய்து கொண்டும்( இவர்கள் சுயநலவாதிகள்) விசாரித்து கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நாம் உசாராக இருக்கவேண்டும். இவர்கள் அடுத்தவர்களை உசுப்பேற்றுவதையே தொழிலாக கொண்டிருப்பார்கள். மேலும் பலர் வக்கீல்கள் நமது அறியாமையை பயன்படுத்தி கொண்டு பணம் பார்க்கும் வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்வதையே வேத வாக்காக நினைத்து கொள்ளாதீர்கள். வக்கீல் சொன்ன விசயங்களை பலரிடம் விசாரித்து முடிவெடுங்கள். மேலும் சுப்ரீம் கோர்ட் விசயம் என்பதால் முடிந்தவரை ஒரே வழக்கறிஞரிடம் ஒன்று கூட நினையுங்கள் அப்போது தான் நமது (பணம் செலவு) பாரங்கள் குறையும். இங்கு பலர் தலைவர் என்ற போர்வையில் அடுத்தவர்கள் பணத்தில் சுகம் கண்டுகொண்டு உங்களுக்கும் சரியான வழிகாட்டாமல் ஒரு குழப்பவாதியாகவே இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் கேஸ் போடவேண்டும் என்று நினைத்தால் எந்த வழக்கறிஞர் சிறந்தவர் என்பதை விசாரித்து முடிவெடுங்கள், முடிவெடுத்த பிறகு அந்த வழக்கறிஞரை முழுமையாக நம்புங்கள் வேறு யாரையும் நம்பாதீர்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் பலர் நம்மை வைத்து ஏதாவது ஆதாயம் தேடிகொள்ளவே நினைக்கிறார்களே ஒழிய நல்லது நினைப்பவர்கள் மிகச்சிலரே.

  மேலும் நிறைய பேர் கேஸ் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற என்னத்திலேயே உள்ளார்கள். அதைபற்றி விரிவாக பார்ப்போம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தபோது பணி நியமணம் நடைபெறவில்லை. ஆனால் தீர்ப்பு நமக்கு எதிராக வந்ததால் பணி நியமணம் நடந்துமுடிந்துவிட்டது. இனிமேல் நமக்கு என்ன என்று இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி. அரசானை 71 மற்றும் 5% ஆகிய இரண்டு விசயங்களில் நமக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நமது பணி வாய்ப்பையே இழந்துள்ளோம். ஆகவே சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நமது பாதிப்பை புரிய வைக்கப்படும்போது அரசின் தவறான கொள்கை முடிவால் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற நாம் இவ்விரு விசயங்களாலும் பாதிக்கப்பட்டது நிருபணம் ஆகும். ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை(வேலை) கொடுக்க உத்தரவிடப்படும். இதை ஒரு முத்த வழக்கறிஞரிடம் நீண்ட விவாதத்திற்கு பிறகு இதை பதிவிடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Respected friends,
   Today 110 affected candidates register their name for file the case against GO 71 in supreme court . If u want to joint the Case.pls contact id: jollykannan@gmail.com. with in sunday.
   Request: pls clarify the doubt and then u joint the case. dont put rs to any account. contact directly.Thank u friends.

   Delete
  2. நண்பர்களே

   வழக்கு தொடருவது என்பது உங்களின் உரிமை.
   பாதிக்கப்பட்ட உங்களுக்குதான் அதன் வலி தெரியும்.
   ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
   Service cases எந்த வழக்குறிஞர் திறம்பட நடத்தி வெற்றிப்பெற்று வருகிறார் என்பதை நன்கு விசாரித்து முடிவெடுங்கள்.
   வெற்றிப்பெற்று பணியில் அமருங்கள்.

   வாழ்த்துக்கள் நண்பர்களே.

   Delete
 2. Sir can any clarify me is there any chance for pg 2nd list please share me details which u know

  ReplyDelete
 3. Sir can any body clarify me is there any chance for pg 2nd list please share me details which u know

  ReplyDelete
 4. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

  தொடர்புக்கு :

  மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

  ரிஷி

  முனுசாமி -- 9940242636


  துரை -- 8608568256

  ReplyDelete
 5. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

  தொடர்புக்கு :

  மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

  ரிஷி

  முனுசாமி -- 9940242636


  துரை -- 8608568256

  ReplyDelete
 6. ALL AFFECTED BCM MUSLIM ABOVE 90 PAPER 1 AND PAPER 2 CANDIDATES QUICKA MADURAI LAJAPATHY SIR LAWYER KITA VANTHU SUPREME COURT KU VANTHU CASE FILE PANNUGA PLS.YEN NA 5% RELAXATION LA AFFECT ANNATHU ATHIGAMAGA BCM PAP 1 AND PAP 2 CANDIDATES THHAAN.SO U CONTACT THE NUMBER IMMEDIATELY 9940841502 AHAMED

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி