தமிழக என்.சி.சி., மாணவர் படை குடியரசு அணிவகுப்பிற்கு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

தமிழக என்.சி.சி., மாணவர் படை குடியரசு அணிவகுப்பிற்கு தேர்வு

:தமிழக அளவில் தேசிய மாணவர் படை மாணவர்களின் சிறப்பு முகாம் நெல்லையில் நடந்தது.தமிழக என்.சி.சி.,மாணவர்களின் தனித்திறன் சோதனைக்கான சிறப்பு முகாம் கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களின் அணிவகுப்பு மிடுக்கு, துப்பாக்கி சுடும் திறன், கலைநிகழ்ச்சிகள், தனிநபர் திறன் உள்ளிட்டவற்றின் தேர்வுகள் நடந்தது. குரூப் கமாண்டன்ட் கோபிகிருஷ்ணா அவற்றை பார்வையிட்டார். சிறந்த மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2015 ஜனவரியில் டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தில் இருந்து 105 தேசிய மாணவ படையினர் பங்கேற்பார்கள். மாநில அளவிலான முகாம் இன்று நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி