பள்ளிகளின் செயல்பாடு குறித்து வீடியோ பதிவுசெய்த முதன்மைக்கல்வி அதிகாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

பள்ளிகளின் செயல்பாடு குறித்து வீடியோ பதிவுசெய்த முதன்மைக்கல்வி அதிகாரிகள்.


பள்ளிகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டதால், நேற்று பள்ளிகள் செயல்பாடு குறித்து வீடியோ பதிவுசெய்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், அதை கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும்நேற்று ஒருநாள் தனியார் பள்ளிகள் செயல்படாது என கூட்டமைப்பினர் அறிவித்தனர். எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதைதொடர்ந்து பள்ளிகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில், பள்ளிகள் மூடும் முடிவை கூட்டமைப்பினர் திடீரென வாபஸ் பெற்றனர். இதனிடையே பள்ளிகள் இயங்குவது குறித்து உறுதிசெய்து வீடியோ எடுத்து அனுப்ப முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. இதன்படி பள்ளிகள் இயங்கியது குறித்து வீடியோவில் பதிவு செய்து அனுப்பப்பட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி