மாநகராட்சி பள்ளிகளில் மொட்டை மாடியில் முன்மாதிரி காய்கறி தோட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

மாநகராட்சி பள்ளிகளில் மொட்டை மாடியில் முன்மாதிரி காய்கறி தோட்டம்!


மதுரையில் இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் முன்மாதிரியாக, மொட்டை மாடியில்காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சொக்கிகுளம் காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் பிபிகுளம் பாண்டியன் நெடுஞ்செழியன்மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான முயற்சியை கமிஷனர் கதிரவன் துவக்கியுள்ளார்.இதுகுறித்து, மாநகராட்சி கழிவுநீர் புல் பண்ணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: விவசாயத்தை, காய்கறி உற்பத்தியை மாணவர்கள் அறியும் வகையில், கமிஷனர்தான் ஏற்பாடு செய்தார். முதற்கட்டமாக இரு பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். வாடிப்பட்டி அக்ரீடு தொண்டு நிறுவனம் மூலம் காய்கறி வளர்ப்பதற்கான பைகள், தென்னை நார் கழிவு, உரங்களை இலவசமாக பெற்றோம். பள்ளிக்கு தலா 50 பைகள் வீதம் ஓரளவு வளர்ந்த செடி நாற்றுகளைதந்தோம்.தற்போது இரு மாதங்களாக காற்கறிகள் வளர்ந்து வருகின்றன. செடி வளர்ப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அடுத்தகட்டமாக மாணவர்களும் இதில் ஈடுபடலாம். சாப்பிடும் காய்கறிகள் எப்படி காய்க்கிறதுஎன்பதை மாணவர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதையே ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் கடைபிடிக்கலாம், என்றார்.காக்கை பாடினியார் பள்ளி தலைமையாசிரியை எழிலரசி கூறுகையில், "கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை, கீரை, பச்சை மிளகாய் செடிகள் உள்ளன. தினமும் கிடைக்கும் காய்களை பறித்து, சத்துணவு சமைப்பதற்கு தருகிறோம். ஆசிரியர்கள் ஆர்வமாக செடிகளை வளர்க்கின்றனர். தேசிய பசுமைப்படை, எஸ்.எஸ்.எஸ்., மாணவிகளைக் கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். மாணவிகளுக்கும் செடிகளைப் பார்ப்பதில் தனி சந்தோஷம்" என்றார்.

1 comment:

  1. GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி