அனைத்து சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்: கோளாறு கண்டறிந்த பிறகு இயக்க விமானப்படை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2014

அனைத்து சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்: கோளாறு கண்டறிந்த பிறகு இயக்க விமானப்படை முடிவு

இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள, சுகோய் 30 போர் விமானங்கள் அனைத்தும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் அந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதை அடுத்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்ட பிறகு, நிறுத்தப்பட்டுள்ள, 200 விமானங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில், 200, சுகோய் 30 விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால், 2009ல் இருந்து இது வரை, ஐந்து மிகப்பெரிய விபத்துகளில் விமானிகள் பலர் இறந்துள்ளனர்; விமானங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து, அந்த விமானங்களில் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிய, அனைத்து, சுகோய் 30 விமானங்களையும் இந்திய விமானப்படை தரையிறக்கியுள்ளது. அடிக்கடி இந்த விமானங்கள் பழுதாவதற்கான காரணம் கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்த பிறகே, விமானங்களை மீண்டும் இயக்குவது என, விமானப்படை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி