புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை.


மாறி வரும் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சமீபத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள், செயல்பாடுகள் குறித்த முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். முதன்மை கருத்தாளர்களாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பால்துரை, ராமானுஜம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 கருத்தாளர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில்,பள்ளி மற்றும் பாடத்திட்டத்தின் நிலையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பாடங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.மாறி வரும் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்க வேண்டும்.

உளவியல் முறையில் மாணவர்களை அணுகி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்.புதிய கல்வியியல் கருத்துக்களின் மூலம் எளிமையான முறையில் கற்பிக்க வேண்டும்.கற்றல் திறன் குறைந்த மாணவர்களை தேர்ச்சி பெறும் அளவிற்கு உயர்த்தவும், சிறந்தமாணவர்களை முழு மதிப்பெண் பெறவும் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.மேலும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில்புதிய ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.புதியதாக பொறுப்பேற்கக் கூடிய ஆசிரியர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்த யோகா பயிற்சியும், பிரபல மனோதத்துவ நிபுணர் மூலம் உளவியல் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முகாமில் தெரிவிக்கப்பட்டது.

17 comments:

 1. Anaivarukkum vanakkam
  vijay chennai sir inum case iruka sir sri sir solirikar please your info and enda datela sir adw selection list varum,please sir please en manam tavikirathu please sir

  ReplyDelete
 2. அரசு உதவி பெறும் பள்ளியில் காலிப்பணியிடம்
  தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது , எனவே விரைவில் உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர் .
  பணம் கொடுத்து வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களின் BIO-DATA வை உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் Cell number உடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . காலிப்பணியிடம் தெரிந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் .

  செலுத்தவேண்டிய தொகை : சென்னை மற்றும் காஞ்சிபுரம்

  பட்டதாரி ஆசிரியர் : 7.5 லட்சம்
  முதுகலை ஆசிரியர் :8.5 லட்சம்

  மற்ற மாவட்டம் - 10 லட்சத்திற்கு மேல்
  தொடர்புக்கு :jegansaran@gmail.com,8144170981

  ReplyDelete
 3. Manonmaniam sundaranar university ddce novemer examination announcement:laste date for fee payment 17.10.2014 with penalty:24.10.2014.

  ReplyDelete
 4. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

  ReplyDelete
 5. Salary account எந்த பேங்க்ல Open பண்ணணும்.

  ReplyDelete
  Replies
  1. SBI than pannanum avasiyam illai, alrdy avanga ellorukum anga ECS aguradhala ivangaluku wrk easy ah irukka ippadi solluranga sbi la acnt illana salary tharamattangalama? appadi sbi than open pannanum vera endha bnk um accept pannamatom sonnangana ezudhi thara sollunga. any nationalize bnk il acnt open pannalam no prblm

   Delete
 6. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE PLEASE CALL ME 8883773819

  ReplyDelete
 7. When wll come ignou bed enterance result

  ReplyDelete
 8. மதிப்பிற்குறிய ஆசிரியர்களே வணக்கம் , நான் 26-09-14 அன்று பட்டதாரி ஆசிரியராக பனியில் சேர்ந்துள்ளேன். ஆனால் எனக்கு 18-09-14 அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது . தற்போது நான் மகப்பேறு காலத்தில் உள்ளதால் எனக்கு என்ன மாதிரியான விடுமுறை எடுக்க முடியும் மகப்பேறு விடுப்பா, அல்லது ஊதியமில்லா மருத்துவ விடுப்பா . நான் குறைந்தது. ஐந்து மாதமாவது விடுப்பு எடுக்க விரும்புகிறேன்.யாரிடம் எப்படி அனுமதி கேட்க்க வேண்டும் . எந்த அதிகாரிக்கு எத்தனை நாட்கள் விடுப்பு கொடுக்க அதிகாரம் உள்ளது . இதுமாதிரி உள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள – 9443560023. நன்றி .

  ReplyDelete
 9. நீங்கள் பணியில் சேர்ந்த மறுநாளில் இருந்தே பிரசவகால விடுமுறையாக 6 மாதம் எடுக்கலாம் ..உங்களுடைய மாவட்டக்கல்வி அலுவலகத்தை அணுகவும் ..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி