புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி

புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை, பாடங்களில் முக்கியப் பகுதிகள் எவை, தேர்ச்சி விகிதத்தை எவ்வாறு அதிகரிப்பது போன்றவை தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, பாடங்களைப் புதுமையாக எப்படி கற்பிப்பது போன்றவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், 2,353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்றது.

தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்க நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தடை உத்தரவை விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கான பணியிடங்களில் சேர்ந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி: பள்ளிக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை. இந்த மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு.... புதிதாகப் பணியில் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் 7 இடங்களில் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. புதன்கிழமை வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் நேற்று
 தெரிவித்தனர்.

9 comments:

 1. Good morning friends today many of us are going to visit Trb please nearest friends come at Trb .

  ReplyDelete
  Replies
  1. Sir after visiting trb pls update the condition

   Delete
 2. How can it be possible? Because Amma is in JAIL know ! So no new recruitment and second list. It takes more time.

  ReplyDelete
 3. payirchiyil atnd panatha aasiriyargalai ena seivaargal

  ReplyDelete
  Replies
  1. Request them politely. They won't do anything. They know fully about Tamil Nadu current situation. Don't worry !

   Delete
 4. Goodmorning friends.v expt 2 liest v soon.

  ReplyDelete
 5. enaku tet certificate innum kedaikala eppo kedaikum frnts pls replay

  ReplyDelete
 6. Education la neraya deportment iruku. Like DSE, DEE
  athu pola oru department tan ADW

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி