விரைவில் வீடு தேடி வருகிறது 'இன்டர்நெட்' : கேபிள் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2014

விரைவில் வீடு தேடி வருகிறது 'இன்டர்நெட்' : கேபிள் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை.


வீடுகள் தோறும் வழங்கியுள்ள, கேபிள் 'டிவி' இணைப்போடு, இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்து வழங்கும் திட்டத்தை விரைவில், அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, கேபிள் ஆபரேட்டர்களுக்கான, சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு கேபிள் 'டிவி' நிறுவனம், மத்திய அரசின், 'ரயில்டெல்' நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் பிராட்பேண்ட் மற்றும் இணையதளசேவையை குறைந்த கட்டணத்தில்,தமிழக அரசு கேபிள் வாயிலாக செயல்படுத்துவது குறித்து, கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுக்கான செயல்விளக்கக் கூட்டம் நேற்று, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடத்தியது.

கூட்டத்தில், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது:இத்திட்டத்தின் கீழ் கேபிள் வாயிலாக, 'டிவி', இணையதள சேவை இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக, 'செட்-ஆப் பாக்ஸ்' பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தில், எந்த சூழலிலும், தங்கு தடையின்றி, கேபிள் 'டிவி', இன்டர்நெட் சேவைகளை எளிதாக பெறலாம். இதில், 'ரயில்டெல்' நிறுவனம் இணைந்துள்ளதால், தரமான சேவை மக்களுக்கு போய் சேரும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இணைப்பு வாயிலாக, அதிகபட்சம், 100 எம்.பி.பி.எஸ்., வேகம் வரை வழங்க இயலும். வீட்டு உபயோகத்துக்கும் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கேற்ப உகந்த கட்டணத்தில் 1:4 என்ற விகிதத்தில் இணைப்பு வழங்கப்படும். 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, பராமரிப்புச்சேவை மேற்கொள்ளப்படும்.

இச்சேவை தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களை சென்றடையும். அதனால், கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.'ரயில்டெல்' நிறுவன தென்மண்டல பொதுமேலாளர் ராஜசேகரன், வர்த்தக மேலாளர் கிருபானந்தன், 'நெட்ஒர்க்' மேலாளர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ., குணசேகரன், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன துணை மேலாளர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர். நீலகிரி, கோவை மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

11 comments:

  1. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

    ReplyDelete
  2. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

    ReplyDelete
  3. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

    ReplyDelete
  4. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
    LIST
    ethir parkum anaithu sisters and brothers

    come to chennai nunkampakkam trb office

    monday sc and sca tet friends above 100 numbers
    and minority friends above 50 numbers comming to chennai

    the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

    communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

    nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

    karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

    eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

    KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

    HARD WORK NEVER FAILS

    ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

    NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL



    THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

    thodapirku

    n.akilan ( pudukkottai ) 8608224299

    rajkumar (madurai) 9092048906

    palani (thiruvannamalai ) 9524805873

    ramesh ( chennai ) 9843325826

    selam 8148812748

    senthilumar selam7845342281

    ReplyDelete
  5. Sir is there any chance for pg 2nd list please share me

    ReplyDelete
    Replies
    1. நமது நலனுக்காக குரல் எழுப்பும் நமது நண்பர் அகிலனுக்கு எனது வாழ்த்துக்கள் .நண்பர்களே இதையும் அலட்சியம் என எண்ணி விடாதிர்கள் .திங்கள் அன்று supreme court ல் go 71 எதிராக case file செய்யும் வேலை மும்முரமாக நடைபெறுகிறது .அதற்குள்ளாக நாம் நமது உரிமையை மீட்டெடுப்போம் .அனைவரும் அணி திரள்வீர் .வெற்றி நமதே .கடவுள் நமக்கு துணை இருப்பார் .நன்றி

      Delete
  6. Thank you sir we are joining with you from hosur

    ReplyDelete
    Replies
    1. அப்படியே நமது நண்பர்களையும் அழைத்து வாருங்கள் .

      Delete
  7. Idhil bc mbc kalanthukkalama sir

    ReplyDelete
  8. Ithu kadaisi vaipu nanparkala anaivarum vanthu kalanthu lollavum trb idam ketpom notification sama date vidutu enkaluku yen final list vidalanu ketpom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி