சான்றிதழ்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை:தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2014

சான்றிதழ்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை:தமிழக அரசு உத்தரவு.


சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம்வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்குப் பதிலாக,
சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர்- நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:குரூப் "ஏ', "பி' பிரிவு அரசு அதிகாரிகள் சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வழங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த நடைமுறை மக்களுக்குப் பயனளிக்காததோடு, அவர்களின் நேரத்தையும், அரசு அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மக்களின் சிரமத்தைக் குறைப்பது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதில் உள்ள பிரச்னைகள், அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள் தேங்குவதைக் குறைத்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பின்போது சான்றொப்பம் இடப்பட்ட நகல்களோடு, அசல் சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன. எனவே, சான்றொப்பம் இடும் நடைமுறை உண்மையில் எவ்விதப் பயனையும் தரவில்லை. மறு ஆய்வுக்குப் பிறகு அனைத்து அரசுத் துறைகளிலும் சான்றொப்பமிடும் நடைமுறையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, அனைத்து அரசுத் துறைகளிலும் குரூப் "ஏ', "பி' பிரிவு அதிகாரிகள் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

அதற்குப் பதிலாக, சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும். நேர்காணல் அல்லது பணி நியமனத்தின்போது அசல் சான்றிதழ்களை காண்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 comments:

  1. Replies
    1. 2nd list varuma sir eppa varum sir indha govt silent ah irrukiradha partha list varadho nu bayama irrukku pls tell sir

      Delete
    2. The situation clearly indicated that Government would appeal SC for retrieving Madurai H C order which cancelled 5% realaxation. Hence 2nd list certainly would be delayed.

      Delete
  2. Sir tamilnadu govt eppo 5-/-relaxtion case yethirthu mel muraiyeedu seiya poguthu today chance irukka

    ReplyDelete
  3. Ethu thaan sari
    One month Ku munnala sollakudathaa
    500 rs save akirukumey

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. Ippo madurai court therppu padi.

    5 % relaxation candidate cases
    after finished exam and CV. Then notice gov givet 5 % relaxation .. So all the candidate.. Cancelled to all

    Ippo tamilnadu Melmuraidu seithal. Next TET exam before notice appurama than posting pannuvangala ???

    reply friends

    ReplyDelete

    SAMY K13 October 2014 11:52
    Above 90 unselected candidate posting fill pannuna piraku than

    Next 5 % and common candidate ????

    ALEXANDER SOLOMON and vijay sir. reply pls

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மையினர் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட கோரிக்கை.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்காததால் பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர்-புதிய தலைமுறை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி