ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும்.


இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை,கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கிவந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி