தேர்வு நெருங்குவதால் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2014

தேர்வு நெருங்குவதால் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.


தேர்வு நெருங்குவதால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மட்டுமல்ல, அனைத்து மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது.

தமிழகத்தில் தரம் உயர்த்திய 100 மேனிலை, 50 உயர் நிலை பள்ளிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி 350 ஆசிரியர்களுக்கான மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 பள்ளிகளுக்கான கலந்தாய்வு இம்மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தரம் உயர்ந்த மேனிலைப் பள்ளிக்கான 100 தலைமை ஆசிரியர்கள் தவிர, எஞ்சிய 250 பேரை, பிற பள்ளிகளிலுள்ள காலி பணி யிடங்களை நிரப்ப, கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடம் குறித்த தகவல்கள் முதன்மை கல்வி அலுவலகங்கள் சேகரிக்கின்றன.பொதுத்தேர்வு நெருங்குவதால், அனைத்து அரசு மேனிலைப்பள்ளி களிலும், தலைமை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5 comments:

  1. முதுகலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வு அறறிவிப்பு எப்பொழுது வெளியாகும்

    ReplyDelete
  2. PG other district transfer plscontact rajarajacholanveera@gmail.com

    ReplyDelete
  3. " TALLENT TEACHER ACADEMY "
    AEEO EXAM CHEMISTRY COACHING
    FULLY SOLVED TAMIL MEDIUM MATERIAL 100 UNIT TESTS 25 MODEL EXAMS PLEASE REGISTER YOUR NAME
    MBILE NUMBER : 78 45 13 85 26

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி