காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு - தினமணி

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) திறக்கப்பட உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக அக்டோபர் 5-ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 6-ஆம் தேதி அரசுப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.
முப்பருவ முறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்காக சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழகத்தில் முப்பருவ முறை அமலில் உள்ளது. இந்த முறையின் கீழ் ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்க உள்ளது. இந்தப் பருவத்துக்கான புத்தக விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் கூறியது:

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்காக சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே விநியோகம் செய்யப்பட்டன. சில பள்ளிகளில் புத்தக விநியோகமும் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கப்படும் நாளான அக்டோபர் 7-ஆம் தேதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.

மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள்: ஜனவரியில் தொடங்க உள்ள மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்துக்குள்ளாக மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிடும்.

இப்போது அச்சிடப்பட்ட புத்தகங்களை நீண்ட தூறும் எடுத்துச்செல்லும் சிரமத்தைக் குறைப்பதற்காக, அந்தந்த மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே புத்தகங்களை அச்சிடும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி