பல்வேறான இந்தியப் பல்கலைக்கழகங்களில், கற்பிக்கும் பணியை மேற்கொள்ள, அமெரிக்க கல்வியாளர்களை ஈர்க்கும் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் CSIR அமைப்பின் விஞ்ஞானிகளை, பள்ளிகள்மற்றும் கல்லூரிகளில் கற்பிக்க வைக்க திட்டமிடப்பட்டதற்கு அடுத்தபடியாக,இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: ஆண்டிற்கு சுமார் 1000 அமெரிக்க கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் கற்பித்தலை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். குறிப்பாக, அறிவியல் மற்றும் புத்தாக்க துறைகளைச் சேர்ந்தகல்வியாளர்கள், தங்களின் வசதிக்கேற்ப இந்தியாவிற்கு வந்து, கற்பித்தல் பணிகளை மேற்கொள்வார்கள்.இந்தியாவின் மேற்கண்ட திட்டத்தை, அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோரின் சந்திப்பின்போது, இது உறுதி செய்யப்பட்டது.
Global Initiative of Academic Networks என்ற பெயருடைய இத்திட்டம், சுருக்கமாக GIAN எனப்படுகிறது. குறுகியகால நோக்கில், அமெரிக்க ஆசிரியர்களை, இந்தியாவிற்கு வரவழைத்து, கற்பிக்க வைக்கும் பணியை, மத்திய மனிதவள அமைச்சகம் மேற்கொள்ளும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏனெனில், அந்த அமைச்சகம்தான், உள்நாட்டு அறிவுத்திறன்களையும், நாட்டினுடைய கல்வி நிறுவனவளர்ச்சிக்கு பயன்படுத்தும் செயல்பாட்டை ஏற்கனவே முன்வைத்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளதுCSIR உள்ளிட்ட, இந்தியாவின் பல்வேறு மத்திய ஆராய்ச்சி ஏஜென்சிகளில் பணிபுரியும் 5000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அனைவரும், ஒரு கல்வியாண்டில் 12 மணிநேர கற்பித்தல் பணியை, அரசு கல்வி நிறுவனங்களில் மேற்கொள்வது கட்டாயம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது நினைவில் கொள்ளத்தக்கது.
இதர அம்சங்கள்
அமெரிக்க ஆசிரியர்கள் இந்தியாவில் கற்பித்தல் பணியை மேற்கொள்வது தவிர, அறிவியல் துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகளை அதிகரித்து, அவற்றின் கூட்டு நடவடிக்கைகளை விரிவாக்குவது என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.மேலும், இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக, Digital India என்ற முன்முயற்சியிலும், புற்றுநோய் ஆராய்ச்சியிலும், அந்நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சையளிப்பிலும் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில், அமெரிக்கா, முதன்முறையாக, ஒரு கூட்டாளி நாடாக கலந்துகொள்ளவுள்ளது. இதுதவிர, இந்தியா - அமெரிக்கா ஆகிய இரண்டும் இணைந்து, ஒன்பதாவது உயர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பை நடத்தவுள்ளதோடு, குடிமக்களின் நலன்களுக்கான source and scale innovation என்பதிலும், புதிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Varaverpom
ReplyDelete