வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல்.


சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்., 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடவேண்டும் என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதில், சர்தார் வல்லபாய் படேல், பிறந்த தினமான அக்., 31ம் தேதியை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.எனவே, பல்கலைகள் தங்கள் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு, இதன் விவரங்களை அறிவுறுத்தி, ஒருமைப்பாட்டிற்கான ஓட்டம் ஒன்றை நடத்தி, மாணவர்களை, ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் ஏற்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. நவம்பர் 19
    மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளையே இதுவரை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இது என்ன புது கதை.....

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கு நீண்ட காலமாக எதிர்ப்பு இருந்து வருகிறது.... சர்தார் வல்லபாய் பட்டேலின் சாதுர்யமான செயல்களால் தான் இந்தியா என்ற ஒரு நாடு முழுமையாக உருவானது என்பதால் அவரது பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டுவரவேண்டும் என்ற கருத்து இருந்து வந்தது... இப்போது அது நடைமுறைக்கு வரலாம்...

      Delete
  2. எதையும் மாற்ற வேண்டாம்...
    அன்னை இந்திரா எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல..
    தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை மாற்ற கூடாது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி