வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

இந்த முகாம் 28 ஆயிரம் மையங்களில் நடைபெறும் எனவும், பெரும்பாலும் பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கும் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 10-ஆம் தேதி இந்தப் பணிகள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருப்பர். பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பப்படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அங்கேயே அளிக்கலாம்.

எதற்கு எந்த விண்ணப்பம்? வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ-ம், பெயரை நீக்க படிவம் 7-ம், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களைத் திருத்த படிவம் 8-ம், பட்டியலில் பதிவு இடம் மாற்றம் செய்வதற்காக படிவம் 8ஏ-ம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 001-ஐயும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இணையதள முகவரி: இணையதளம் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம். இதற்கான இணையதள முகவரி www.elections.tn.gov.in/eregistraion

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி