ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.


புதுச்சேரி: துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், மிகமிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினருக்கான 19 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஊனமுற்றோர்க்கான 5 துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மொத்தம் 302 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனைசெய்யப்பட்டது. அதில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15, மிகமிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினர், உடல் ஊனமுற்றோர் பிரிவு ஆகியவற்றுக்கு தலா ஒன்று என, மொத்தம் 18 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் https://www.py.gov.in அல்லது http://schooledn.puducherry.gov.inஎன்ற வலைத்தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி