வேலையை தேர்வு செய்வது எப்படி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2014

வேலையை தேர்வு செய்வது எப்படி

தற்போதுள்ள இளைஞர்கள் குறைந்தபட்ச அடிப்படை கல்வியை முடித்தவர்களாகவே உள்ளனர். வேலை எந்தளவு பெருகியுள்ளதோ, அதே அளவிற்கு போட்டியும் பெருகிவிட்டது. 100 இடங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என்றால், 10 ஆயிரம் பேர் வருகின்றனர். இவர்களில் இருந்து 100 பேருக்குள் வருவது எளிதல்ல. வேலைக்கு செல்லவிருக்கும் நிறுவனம் எதிர்பார்க்கும் திறமையை வளர்த்துக்கொண்டு, நேர்காணலை சந்தித்தால் வேலை பெறலாம்.

இன்றைய இளைஞர்கள் வேலை தேடுவதில் பல விதமாக செயல்படுகின்றனர்.

சிலர் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என, படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலைக்கு செல்கின்றனர். சிலர், படித்த துறையிலேயே வேலைக்கு போகவேண்டும் என நாட்களை கடத்துகின்றனர். இதனால் எந்த துறையில் பணியில் சேர்வது என்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. படித்து முடித்த சில ஆண்டுகளிலேயே மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் பணி மாறியவர்கள் உண்டு. தங்களின் திறன் எது என முதலில் கண்டறிந்து பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ, இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம். ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அத்துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம். பலரும், வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாதது மற்றும் ஈடுபாட்டோடு வேலை பார்க்காதது தான்.துறை சார்ந்த புதிய திறன்களை மேம்படுத்திக்கொள்ள தயங்கக் கூடாது. உங்களிடம் இருந்து வேலை வாங்கலாம் என்ற மனநிலை நிறுவனத்திடம் நீடிக்கும் வரை மட்டுமே, அந்நிறுவனம் உங்களை பணி-யில் தொடர அனுமதிக்கும்.

எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதைப் பார்த்து பணியில் சேர்வதை விட, எந்த துறையில் சேர்ந்தால் அதிக காலம் பணியாற்ற முடியும் என பார்த்து சேர்வது நல்லது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி