CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!


கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
முதல் தாள், இரண்டாம் தாள்இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89பேர் மட்டுமே! எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் எழுதினார்கள் என்கிறபுள்ளிவிவரங்களுக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. எந்தெந்தமாவட்டங்களிலிருக்கும், எந்தெந்த கல்வியியல் கல்லூரிகளில் இந்த 89 பேர்படித்தார்கள் என்பதெல்லாம்கூட இந்த இடத்திற்கு தேவையில்லாதது. இந்தநேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் - நாம் அகில இந்திய அளவிலான ஆசிரியர் தொழில்வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம் என்பதை மட்டுமே!தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், எந்த ஊரிலும் சிறந்தஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்றநிலைமை இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது.

பிறமாநிலங்களுக்கு மட்டுமன்றி, பிலிப்பின்ஸ், ஆப்பிரிக்க நாடுகள்போன்றவற்றுக்குக்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்என்று சொல்வதே ஒரு தகுதியாக அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கணித ஆசிரியர்களாக, அறிவியல் ஆசிரியர்களாக, ஆங்கில ஆசிரியர்களாக தமிழர்கள் பலதிசைகளிலும் பறந்து சென்று பணியாற்றிய காலம் அது. கேரளத்தவர் செவிலியர்களாக உலகம் முழுதும் வலம் வருவதைப்போல,தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும்ஆசிரியர்களாக வலம் வந்தனர். இப்போதும் அந்த வாசல்கள்திறந்தே இருக்கின்றன. ஆனால், செல்வதற்குத்தான் ஆசிரியர்கள் இல்லை.இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரியவித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியராகச் சேரும் வாய்ப்பை தமிழர்கள்ஏன் இழக்க வேண்டும்?தமிழ்நாட்டின் தனியார் கல்வியியல் கல்லூரிகள் பலவும், பி.எட் பட்டம்இருந்தாலே போதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்துவிட்டு, அரசியல் செல்வாக்கினால் அரசுப் பள்ளி களில் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் தோன்றியவை.இவற்றில் பலவும் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மட்டுமே செயல்பட்டவை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர்பணி கிடைக்கும் என்ற நிலை உருவான பிறகு, தமிழகக் கல்வி உலகில் புதிய மாற்றம்ஏற்பட்டது.

அரசியல் செல்வாக்குகள் மூலம் பணி நியமனம் பெறும்தகுதியில்லாத, சம்பளம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஆசிரியர்கள்எண்ணிக்கை கணிசமாகக் குறையும், தரமான ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தகுதியை உயர்த்தும், உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் யாரும்இறங்கவில்லை. தகுதித் தேர்வை தங்கள் தகுதிக்கு ஏற்ப குறைக்கும் நடவடிக்கைகளைத்தான் பல வகைகளிலும் காண்கிறோம். தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்கக் கோரியும், சிறப்புச் சலுகை தரக்கூடாது என்றும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப் படவில்லை என்றும் ஒவ்வொரு காரணத்துக்கும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதன் பின்னணி, பெரும்பான்மையான கல்வியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதுதான். தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கும் நம்மால் ஆசிரியர் தொழில் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையில் ஆசி ரியர் பட்டம் பெற்றவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் தங்களைஇயக்குபவர்களின் கைப்பாவைகளாக மாறிப்போகிறார்கள். இன்றைய தேவை, கல்வியியல் நிறுவனங்களைத் தரமானவையாக ஆக்குவதும், அவற்றின் அனுமதியை மறுபரிசீலனைக்கு உள்படுத்துவதும்தான்.

தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தோன்றியுள்ள கல்வியியல் கல்லூரிகளை முறைப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டாகவேண்டும். லாபம் கருதித் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் (போதிய வருவாய் இல்லை என்பதற்காக பி.எட். தொடங்கிய பல்கலைக்கழகங்கள் உள்பட) அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தி, தரமில்லாத, தேர்ச்சி விகிதம் குறைவான, பயிற்றுநர்கள் இல்லாத கல்வியியல் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்வதோடு பாடத்திட்டம், பயிற்சி அனைத்தையும்வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியியல் கல்லூரிகள் தரமானவையாக இருக்குமெனில், தங்கள் மாணவர்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகள் மட்டுமே கதி என்று இல்லாமல், இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு உள்ள கற்பித்தல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளதுணை புரியும். தமிழகத்தில் பணியாற்றுவோரும், அடுத்த தலைமுறைக்கு தரமான கல்வியைக் கற்பிப்பார்கள்.

11 comments:

  1. அருமையான வரிகள்.

    தகுதி தேர்வை, தங்கள் தகுதிக்கு எற்ப குறைக்கும் நடவடிக்கைகளைத்தான் பல வகைகளில் காண்கிறோம்.

    நன்றி உண்மையை உரக்க சொன்னதற்க்காக

    ReplyDelete
    Replies
    1. sri sir/mani sir/solomon sir/any body pls tell how to get TTC certificate for sewing teacher? now my sister going to tailoring class(,emproitring)

      Delete
  2. I have 12 years of experience in private CBSE school. I have passed both CTET and TET and did not get any govt.job because of this weightage system. CTET tests thinking skill while TET tests one's memory. Most of the questions are from the book. CTET questions are in English and Hindi. Tamil Medium teachers find it difficult. If one is good at English and if they have thinking skill they can pass in CTET.

    ReplyDelete
    Replies
    1. which year and which paper CTET COMPLETE BOSS?

      Delete
    2. Dear Vijaya Jayabalan

      Happy to hear that you have passed CTET. Congratz.

      What obstacles you faced in getting JOB for CTET?

      Delete
  3. Vijaya jayabalan please call and help me to pass in ctet. I'm physically handicapped. 9944738638

    ReplyDelete
  4. i also passed CTET2014. I passed TNTET2012 WITH 106 MARKS, MY WEIFHTAGE IS 71.36 but I didn't get job.

    ReplyDelete
    Replies
    1. If u have passed in 2012 Tet, then wat happened for ur job? What is ur major?

      Delete
  5. tntet 2012 la weitage pakkama pass aana yellarukum velai kuduthangale. what happened? ungaluku matum kedaikala?

    ReplyDelete
  6. I have passed both ctet in 2011and tntet in 2012... but how they r giving appointment using ctet? There is a separate exam after passing Ctet.. but in tntet????

    ReplyDelete
  7. I have passed kendravidhyalaya how to get a job anybody knows

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி