TET -2013 இன்னுமொரு நலிவடைந்த பிரிவினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2014

TET -2013 இன்னுமொரு நலிவடைந்த பிரிவினர்.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5%மதிப்பெண் தளர்வு வழங்கியது தவறு என்றும்சமூக நீதி என்பதை இதில் எதிர்பார்க்க வேண்டியதில்லை.(http://www.kalviseithi.net/2014/09/tntet-5.html#more)என்றும் கூறி மதுரை உயர் நீதிமன்றம் 5%மதிப்பெண்தளர்வு வழங்கிய அரசணையை தள்ளுபடி செய்துள்ளது.

5%மதிப்பெண் தளர்வு வழங்கியது பற்றி மற்றவர்கள் எதிராக சொல்லும் போது, இது சமூக நீதிக்கு எதிரானது என்றும்,வன்கொடுமைசட்டம் பாயும் என்றும் சில நன்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீதிமன்றமே இது சமூக நீதிக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளது.

வன்கொடுமை என்றால் என்ன?

வன்கொடுமை என்பது நாம் ஜனநாயகத்தைப் பெயரளவில் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு ஜாதிய சமூகம், ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், பாராமை, அனுகாமை, தீண்டாமை, ஜாதிய பாகுபாடுகள். ஜாதி, வர்ண உணர்வுகளின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அவற்றை ஜனநாயக உணர்வோடு கடக்கவேண்டும். இந்த கூற்று படி பார்த்தால்,வன்கொடுமை என்பது இப்போது வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே நடப்பதாகவே தோன்றுகிறது.முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் அனைவரும் செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அதில் ஒருவர்கூட வறுமையில் இல்லை என்றும் தவறாக இந்திய அரசு கணித்துவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை. அதற்க்கு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிக பெரிய பங்கு உண்டு.

ஏனெனில் இட ஒதிக்கிட்டாளர்களின் வாக்கு வங்கியே, அரசியல்வாதிகளுக்கு முக்கியமாகப்பட்டதே அல்லாமல் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் தினசரி வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடாதா?. இதே நிலைமை நீடித்தால் அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே இந்த சமுதாயம் அவர்களை ஒதுக்கிவிடாதா?.

மண்டல் ஆணைக்குழு, மற்ற வகுப்பை சார்ந்தவர்களுக்கு, அந்தந்த பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு பரிந்துரை செய்ய 1979 ஆம் ஆண்டு முன்வந்த போது,வறுமையில் வாடும் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கும்இட ஒதுக்கீடு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதுஅவர்கள் நினைவிற்க்கு வரவில்லையா?இதுமண்டல் ஆணைக்குழுவின் பணியில்லை என்று அப்போதைய அரசு எண்ணியிருந்தால், 1979லிருந்து இன்று வரை ஆட்சி அமைத்த எந்த அரசுமுற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் பிரச்னைகளை ஆராயஆணையங்கள் அமைத்திருக்க வேண்டாமா??.

நலிவடைந்த பிரிவினருக்கு 50% மிகாமல் இட ஒதுக்கீடு கட்டாயம் ஒதுக்க வேண்டுமென்று மாநில அரசுக்களை மத்திய அரசு அறிவுறுத்திய போது, நமது மாநிலஅரசு புதிய சட்டத்தை இயற்றி சரத் 9கீழ் மக்கள் தொகையின் கணக்கின் படி நலிவடைந்த பிரிவினருக்கு 69% ஒதுக்கீடு செய்கிறோம் என்று புதிய சட்ட இணைப்பை ஏற்படுத்தி நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கை தரம் உயர வழி வகுத்து கொடுத்தது.இதேபோல் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 31%-ல் ஒரு குறிப்பிட்டசதவிகிதம் இவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்து கொடுத்தால் இவர்களும் பயன் அடைவார்கள்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14-ல் இந்த தேசத்தில் வாழும் அனைவரும் சட்டத்தின் முன் சமம்.(14. The State shall not deny to any person equalitybefore the law or the equal protection of the laws within theterritory of India)என்றிருக்கும்போது,இவர்களும் இந்த நாட்டின் குடிமக்களே, இவர்களின் உரிமையை மட்டும் பரிப்பதில் என்ன நியாயம்??. எங்கே சமத்துவம் ஓங்கி உள்ளது??.

சுயநலத்தின் உச்சியில் இருக்கும் எந்த அரசியல் கட்சியும் இவர்களின் குறைகளை தீர்க்க முன் வராது என்பதுஉண்மை.இவர்களுக்கு ஏறப்படும் அநீதியும் ஒருவகைபாராமை, அனுகாமை,தீண்டாமை தானே. இந்த வன்கொடுமையை ஒழிக்க இன்னுமொரு பெரியார் வரவேண்டுமென்று விழி பிதுங்கி, வழி தேடிகாத்துக்கொண்டிருக்கும் இன்னுமொரு நலிவடைந்த பிரிவினர்.

இவன்
A ALEXANDER SOLOMON

29 comments:

  1. super sir naan degree 1st class,pg history bharathidasan university 4th rank b,ed 1 st class aanal scholarship kidaiyathu,idavothikidu kidaiyathu,last pg trb examil cv varai ponean oc endra ore karanatthal job illai intha trb il state 6th rank tet selected oc illamal irunthal naan munbe job poiyuruppean

    ReplyDelete
  2. 2000 ஆண்டுகளாக ஏகபோகமாக வளங்களை அனுபவித்தவர்கள் ஓ சி பிரிவினர். இந்திய கட்டமைப்பில் பொருளாதாரம் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி தான் இடஒதுக்கீடு.

    ReplyDelete
    Replies
    1. Yes..pavi u r correct samukathil sathi eppothu olinthu anaivarum samam enru oru nilaie varuma appothuthan ethu unmayagum katantha andukalil athavathu katantha 2000 andukalaga samukaththil othikkivaithu enruvarai thindathakathavanaga munnariya makkal enru thangalaie thanae kurikollum makkal ennum otukkappatta makkalai oru kalikuththaga ennikenranar....palathalaimuraiyaie padithu varupavanugum padippu marukkappattu muthal thalaiemurayaie vanthu padippavanugum vithiyasam undu.pirappil uyarnthavan thalnthavan ennum ennam eppothu entha ulagil marumo appothu ningal ninaiepavaie marum.....

      Delete
    2. திரு பவி அவர்களே

      ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறு என்று யாரும் சொல்லவில்லை. OC-பிரிவில் இருக்கும் அனைவரும் செல்வந்தர்கள் இல்லைஅந்த பிரிவிலும் நலிவடைந்த ஒடுக்கப்பட்வர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏன் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படவில்லை எனபது தான் கேள்வி.

      Delete
    3. நடப்பாண்டை கணக்கிடும் நண்பர் அலெக்ஸ் சென்ற வருடம் 2012ல் ஓ.சி பிரிவினர் எத்தனை பேர் வேலைக்கு சென்றுள்ளனர் என்பதை தாங்கள் அறிவீரா???

      மேலும் சென்ற வருடம் ஆசிரியர் பணிநியமனங்களில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை அந்தனால் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு சாதகமாக அமைந்தது என்பதையும் மறக்க வேண்டாம் நண்பரே...

      Delete
    4. Dear Mr Rajalingam

      I don't compare year by year by year. All you know that still there are economically and educanally poor in OC. Why these kind of people totally ignored by the benefits offered by the Government, only because OC and not being considered thier inferior standard of living status.

      Delete
    5. தங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் நண்பரே....

      இல்லாத Law- i நீங்கள் கேட்கிறீர்கள் ஆனால் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே இங்கு மறுக்கப்படுகிறதே???

      Delete
    6. அது என்ன நண்பரே இல்லாத சட்டம்.
      சட்டம் என்பது மக்களுக்காக தானே

      Delete
    7. இந்த ஜனநாயகத்தின் பார்வைல் அனைவரும் சமமாக கருத வேண்டு ம் என்றால் அனைவருக்கும் சமஉரிமை வேண்டும் , 1 ௦௦ % ல் 31% அணைவருக்கும் oc . bc bcm sc sca st ஆனால் தனியாக BC க்கு 31 % , MBC க்கு 2௦ % , ST க்கு 1 % SC க்கு 18 % கொடுத்தது போல் oc க்கு தனியாக ஒதுக்கி இருக்க வேண்டும் அதன் பின்தான் GT என்று சொல்ல கூடிய பொது பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் இப்படி செய்தாள் தான் அரசு அனைவரையும் சமமாக நடத்துகிறது எனலாம் இ பொது உள்ள முறை OC பிரிவினர் ஒடுக்கபடுகிறார் என்பதே உண்மை உண்மை இது அனைவருக்கும் நன்றாக தெரியும்

      Delete
    8. super thulasi sir .pavikku teriyathu indraiya oc makkal nilai.pavi arasiyalvaathipoal pesavendam.appothaiya history veru indraiya nilai veru.oc kkum idaodukkeedu theavai university rank vangiya enkku yentha salugaiyum illai

      Delete
    9. rajalingam sir oc patri ungallukku theriyuma

      Delete
  3. GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
  4. கட்டுரை யதார்த்தத்தை அழுத்தமாய் உணர்த்துகிறது.

    ReplyDelete
  5. Very good and thanks for statement.Most of the OC people are economically not well.So goverment need to take some soloution to resolve this and need reservation as per economical survey.

    ReplyDelete
  6. BC, BCM, MBC, SC nu ella pirivilum 90above vaaipillama irukkum pothu 5% relex yarukku ?

    ReplyDelete
  7. Today my god CHE GUEVARA vin ninaievu naal so.....pl remember che life.......try hero CHE GUEVARA

    ReplyDelete
  8. WHAT IS THE CTET PASS MARK FOR OBC

    ReplyDelete
  9. BC & MBC TAMIL MAJOR 67.50 ABOVE WEIGHTAGE ONLY PLEASE CALL. 8883773819. ADW LIST COMING SOON

    ReplyDelete
  10. Friend OC people are asking reservation in General quota ( 39% ) itself.pl understand .

    ReplyDelete
    Replies
    1. Exactly my dear friend.Mr Nadaraj

      Delete
    2. ஸ்ரீ நடராஜி பாலாஜி அவர்களே சின்ன திருத்தம் 39 % இல்லை 31 % ல் தனி ஒதிக்கீடு வேண்டும் என்பது தான் சரி

      Delete
  11. Dear friends
    The candidates who lost(esp. OC) their job its only because of OC . Law says everybody is equal before law. But where is equality given to the OC candidates. I didn't get my job in tet because of OC. Why don't they give reservation to OC From general turn .All the OC candidates should join together to get reservation . Let's lodge a case in supreme court to get justice. If u (OC candidates ) agree so. Let's file a case in supreme court. My email id is kiranpv30@gmail.com

    ReplyDelete
  12. thank u alex sir for supporting us....

    ReplyDelete
  13. Well said Mr.Kiran need OC people unity required in this matter.Already supreme court case was there against 69% reservation.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி