அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம்


அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.


1,028 ஆசிரியர்கள் நியமனம்


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என மொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

எழுத்துத்தேர்வு

மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 190 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியாக பதில் அளித்தால் ½ மதிப்பெண் உண்டு. மீதம் உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

சம்பளம் உயர்வு

ஏற்கனவே 16 ஆயிரம் சிறப்பு தொகுப்பு ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் சம்பளம் போதாது என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி அவர்களின் சம்பளம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி