ஓட்டுனர், நடத்துனர் பணியில் சேர2.31 லட்சம் விண்ணப்பம் விற்பனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

ஓட்டுனர், நடத்துனர் பணியில் சேர2.31 லட்சம் விண்ணப்பம் விற்பனை

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, 2.31 லட்சம் பேர், விண்ணப்ப மனு வாங்கி சென்றுள்ளனர்.20 நாட்களாக...தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியவற்றில், 7,500 காலிபணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளில் சேர விரும்புவர்களுக்கு, போக்குவரத்து கழகஅலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்றுடன் முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அந்தந்த மண்டல அலுவலகங்களில் டிச., 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 20 நாட்களாக, தமிழகம் முழுவதும் மண்டல அளவில் உள்ள அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கவும், அதிகளவில் வந்தனர். இறுதி நாளான நேற்று, விண்ணப்பம் பெற அதிகம் பேர் ஆர்வமுடன் வந்தனர்.


100 ரூபாய்:இதுகுறித்து, போக்கு வரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 19ம் தேதி வரை, எட்டு போக்குவரத்து கழகங்களிலும், 2.31 லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தப்படுகிறது.இதன் மூலம், கழகங்களுக்கு, 2.31 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். விண்ணப்பங்களை பெற்றவர்களில் இதுவரை, 60 சதவீதம் பேர் பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி