10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.


திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் இணையம் முலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், மணவாளநகரில் உள்ள நடேச செட்டியால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், திருவள்ளூரில் உள்ள ஆர்எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் தேர்வர்களும், பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தாற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொன்னேரி கல்வி மாவட்டத்தில், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்பெண் தேர்வர்களும், அம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தாற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக் கட்டண விவரம்:

தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையப் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 ரொக்கமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பத்துடன் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 9-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ் நகல், 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.செய்முறை பயிற்சித் தேர்வு: செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்து கொள்ள விடுபட்ட தனித் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை கீழ்காணும் மையங்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேல்நிலைப் பள்ளி, ஆவடியில் காமராசர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் தேர்வர்களும், திருவள்ளூரில் ஆர்எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆவடியில் காமராசர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் தேர்வர்களும் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பொன்னேரி கல்வி மாவட்டத்தில், செங்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மீஞ்சூர்டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் தேர்வர்களும், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் தேர்வர்களும் செய்முறைத் தேர்வுக்கு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.செய்முறைத் தேர்வுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.125 ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி