திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வுஎழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற 10-ஆவது கல்விக்குழுக் கூட்டம் தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இக்கூட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், புரொவிஷனல் சான்றிதழ் உள்ளிட்ட 3 லட்சத்து 18 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ள 41 ஆயிரம் பேருக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கவும், வரும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை முழுமையாக கணினிமயமாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி