10 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்க வேண்டும் : அரசு மருந்தாளுனர்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

10 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்க வேண்டும் : அரசு மருந்தாளுனர்கள் போராட்டம்

'மருத்துவ சேவை அதிகரித்து வரும் நிலையில், 10 ஆயிரம் கூடுதல் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என, அரசு மருந்தாளுனர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில், சென்னை யில், போராட்டம் நடந்தது. ஏராளமான மருந்தாளுனர்கள் பங்கேற்றனர்.

மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன; பல்வேறு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுகின்றன. சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், 3,800 மருந்தாளுனர் பணியிடங்கள் தான் உள்ளன. 100 புறநோயாளிகளுக்கு ஒருவர் என, 10 ஆயிரம் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிற ஊழியர்களுக்கு உள்ளது போல், பணி நேரத்தை, 9:00 மணி முதல், 4:00 மணி என, மாற்ற வேண்டும். மருந்துகளை பாதுகாக்க முறையான கிடங்குகள், மருந்தகங்கள் ஏற்படுத்த வேண்டும்; மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வு வேண்டும். இந்த கோரிக்கைகளை, ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தையில், அரசு ஏற்றுக்கொண்டும், இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, போராட்டம் நடத்தி உள்ளோம். அரசு விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் என, நம்புகிறோம். இல்லாவிட்டால், இம்மாத இறுதியில், அடுத்த கட்டமாக, வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி