கோவையில், 350 டன் பள்ளி பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில், புத்தகங்களை எடை போட்டு வாங்கிய வியாபாரியை தேடி, தனிப்படையினர் கோவில்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக அரசு, 2011ம் ஆண்டு கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்த சமச்சீர் கல்வி அல்லாத, 350 டன் எடை கொண்ட பாடப் புத்தகங்கள், அரசுக்கு தெரியாமல், எடைக்கு விற்பனைசெய்யப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்போதைய கோவை சி.இ.ஓ., ராஜேந்திரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சி.இ.ஓ., ராஜேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக, இளநிலை உதவியாளர் சரவணன் மற்றும் பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், புத்தகங்களை, லாரி மூலம், சிவகாசி கொண்டு சென்று விற்றது தெரிய வந்துள்ளது.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:பள்ளி பாடப் புத்தகங்களை கிலோ 4 ரூபாய்க்கு விற்று, 14 லட்சம் ரூபாய் லாபம் அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு தயாரிக்கவும், பழைய பேப்பர் கடைகளுக்கும் புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.அரசு புத்தகங்கள் என்று தெரிந்தும் எடைக்கு வாங்கிய வியாபாரி, அதை கிலோ 7 ரூபாய் என்ற கணக்கில் விற்றுள்ளார். அவரைத் தேடி, கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி