பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்த டிச., 15ம் தேதி வரை கெடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்த டிச., 15ம் தேதி வரை கெடு

'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள், அமல்படுத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடக போக்குவரத்துத் துறை, பள்ளி நிர்வாகங்களை எச்சரித்து உள்ளது.

கர்நாடக போக்குவரத்து கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து, பள்ளி நிர்வாகம், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பாதுகாப்பு விதிமுறைகள், டிச., 15ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனையின் போது, விதிகளை அமல்படுத்த தவறிய, நிர்வாகங்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:


* பள்ளி வாகனங்கள் முன்புறமும், பின் புறமும் 'ஸ்கூல் பஸ்' என்று தெளிவாக எழுத வேண்டும்.


* வாடகைக்கு எடுக்கப்படும் வாகனங்களாக இருப்பின், 'ஆன் ஸ்கூல் ட்யூட்டி' என்று முன்பும், பின்பும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


* அனுமதிக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேல், மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது.


* வாகனங்களில் தீயணைப்பு கருவியும், முதலுதவி பெட்டியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


* ஜன்னல் கம்பிகள் நீளமாக, எளிதில் திறக்கக்கூடிய வகையில் அமைக்க வேண்டும்.


* பள்ளியின் பெயரும், தொலைபேசி எண்ணும், பஸ்களின் மீது எழுதப்பட்டிருக்க வேண்டும்.


* வாகனங்களின் கதவுகளில் உள்ள பூட்டுகள், எளிதில் திறக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும்.


* மாணவர்கள் அமரும் இருக்கைகளின் கீழ், அவர்கள் கொண்டு வரும் புத்தக பைகள் வைக்குமளவுக்கு, இடவசதி அமைய வேண்டும்.


* பஸ்சில் மாணவர்கள் பாதுகாப்புக்காக, முடிந்தவரை ஆசிரியராக இருப்பவர் ஒருவர், உடன் செல்வது அவசியம்.


* அதிகபட்சம் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில், வேகக்கட்டுப்பாட்டு கருவி அமைக்க வேண்டும்.


* பள்ளி வாகனம் என்று குறிப்பிடும் வகையில், ஹைவே மஞ்சள் நிறம் பூசியிருக்க வேண்டும். வாகனத்தின் நடுப்பகுதியில், 150 மி.மீ., அகலத்துக்கு பச்சை நிறம் பார்டர் அடிக்க வேண்டும்.


* வாகனங்களில், கறுப்பு திரை கண்ணாடிகள் இருக்கக் கூடாது.


* வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பெயர், வகுப்பு, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், இயக்கப்படும் ரூட் விவரங்கள், ஆபத்து நேரத்தில் உதவும் வகையில், தயாராக வைத்திருக்க வேண்டும்.


* பள்ளி வாகனங்கள் குறித்து, பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அமைத்து, பயணம் செய்யும் மாணவர்களையும், வாகனங்களையும், பள்ளி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி