TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

இசையமுது
சொல்பொருள்
*  வானப்புனல் - மழைநீர்
*  வையத்து அமுது - உலகின் அமுதம்
*  வையம் - உலகம்

*  தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
*  புனல் - நீர்
*  பொடி - மகரந்தப் பொடி
*  தழை - செடி
*  தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
*  தழைத்தல் - கூடுதல், குறைதல்
*  தழைக்கவும் - குறையவும்.
*  புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
*  இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
*  பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
*  காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
*  பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
*  திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
*  படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
*  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
*  கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
*  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
*  பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

பழமொழி நானூறு
சொல்பொருள்:
*  ஆற்றவும் - நிறைவாக
*  நாற்றிசை - நான்கு + திசை
*  ஆற்றுணா - ஆறு + உணா
*  வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
*  பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார்.
*  முன்றுறை என்பது ஊர்ப்பெயர்
*  அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்
*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு.
*  பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
*  ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
*  ஆற்றுணா வேண்டுவது இல் என்பது - கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா என்பது பொருள்.

பொருள்:
*  ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
*  ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
*  குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.

உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
*  நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால் நேரு
*  நேருவின் துணைவியார் பெயர் - கமலா
*  தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ளது.
*  நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம் எழுதியுள்ளார்.
*  பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும் போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
*  நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
*  நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
*  போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
*  அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
*  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
*  இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
*  தழை என்பதன் பொருள் - செடிகொடி.
குறிப்பு:
*  சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
*  மில்டன் - ஆங்கில கவிஞர்.
*  பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
*  காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
*  டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் - உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
*  பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.
*  பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும் பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
*  கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
*  நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில்  அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.
*  ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு
எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு
குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.
இலக்கணம்:
*  ஓளியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாக சேர்த்து வருவது, பிரித்தால் பொருள் தராது.
எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள. இதனை இரட்டைக்கிளவி என்பர்.

செய்யுள்: சித்தர் பாடல்
*  சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக
வழிப்பட்டவர்கள்.
*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
*  சித்து - அறிவு
*  கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
*  நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
*  பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.
*  வேம்பு - கசப்பான சொற்கள்.
*  வீறாப்பு - இறுமாப்பு
*  கடம் - உடம்பு.
*  சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
*  கடம் - உடம்பு
*  வெய்யவினை - துன்பம் தரும் செயல்
*  சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
*  பலரில் - பலர் + இல்(வீடுகள்)

கவிதை: தாகம்
*  யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
*  கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
*  இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
*  புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
*  தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பால் வீதி

உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா
*  இயற்பெயர்: இராமசாமி்.
*  பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
*  பிறந்த ஊர்: ஈரோடு.
*  தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம் அகியன.
*  போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
*  தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் - சுயமரியாதை.
*  பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
*  சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
*  மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
*  பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார் - 13,12,000 கி.மீ
*  பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.
பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.

செய்யுள்: புறநானூறு:
*  புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
*  தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
*  இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
*  அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர்,  நண்பர் - ஔவையார்.
*  சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
*  நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.
சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
*  ஔவை என்பதன் பொருள் - தாய்.

பாடல் வரிகள்:
*  எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்

பொருள்:
*  அவல் - பள்ளம்
*  மிசை - மேடு, *  நல்லை - நன்றாக இருப்பாய்.

புதுக்கவிதை: திண்ணையை இடித்துத் தெருவாக்கு!
*  திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர்.
*  ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
*  காலம்: 26.02.1947 - 13.05.2000
*  பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.
*  பாடல்வரிகள் சில:
"கடலின் நான் ஒரு முத்து"
எத்தனை உயரம் இமயமலை- அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை"
பூமிப்பந்து என்ன விலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!

உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கர்
*  பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
*  பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் - இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார்.
*  இவருடைய ஆசிரியர் - குறைவறவாசித்தான் பிள்ளை.
கல்வி:
*  தொடக்கக்கல்வி - கமுதியில் கிறித்துவ பாதிரியார்களிடம் பெற்றார்.
*  பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) - 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில். *  இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது.
*  தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர்.
*  சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்தார்.
*  முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் - 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
*  முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் - வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 06.09.1939-ல் மதுரை வந்தார்.
*  நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
*  சமபந்தி முறையை ஆதரித்தார்.
*  தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.
*  தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
*  தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
*  சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
*  1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
*  தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய பெயரையும் சூட்டியுள்ளது.
*  முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 இல் மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வருகை தந்தார்.
*  முத்துராமலிங்க தேவர் தன்னுடைய சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்தார்.
*  17 பாக சொத்துக்களில் 16 பாகங்களை 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.
*  உப்பக்கம் என்றால் முதுகப்பக்கம் என்று பொருள்.
*  உம்பர் என்றால் மேலே என்று பொருள்.
*  உதுக்கண் - சற்றுத் தொலைவில் பார்.
*  கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட ஆண்டு - 2001 சனவரி-1.
இவரின் கூற்றுகள்:
*  சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும்
அல்ல சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்ததிற்கும் இல்லை.
*  வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்.
*  பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு.
*  மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் என குறிப்பிட்டுள்ளார்.
*  மறைவு - 1936ஆம் ஆண்டு அக்டோபர் 30(பிறந்தநாள்)

இலக்கணம்:
*  சுட்டெழுத்துக்கள்- மனிதனையோ பொருளையோ சுட்டிகாட்ட உதவும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள். அவை: அ, இ பழங்காலத்தில் உ (தற்போது பயன்படுத்துவது
இல்லை) எ.கா: அப்பெண், இப்பையன், இவ்வீடு, அந்தப்பக்கம், இந்தவீடு, அ, இ சுட்டெழுத்துக்கள் தனியே நின்று சுட்டும் போது ஆண் பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகின்றன.
*  அகச்சுட்டு - அவன், இவன்
*  புறச்சுட்டு - அப்பையன்
*  சுட்டுத்திரிபு - அந்தப்பக்கம்.
*  தகவலை வினா ஆக்கும் எழுத்து - ஆ
எ.கா: அவன் செய்தான் - அவனா செய்தான்?
*  வினா எழுப்ப உதவும் வேறு சில எழுத்துக்கள் - எ-விடை என்ன? ஏ-ஏன் வந்தாய்?  யா-யார் அங்கே ? யோ- நீயோ செய்தாய்?
*  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ எ.கா: அவனோ செயதான், சீதையே சிறந்தவள்.
*  தற்போது ஏ க்கு பதில் தான் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அவன் தான் சிறந்தவன்.

பொருள்:
*  ஈரம்- அன்பு,
*  அனைஇ - கலந்து
*  படிநு - வஞ்சம் *  அகன் - உள்ளம்,
*  அமர் - விருப்பம்

*  செம்பொருள் - சிறந்த பொருள்
*  துவ்வாமை - வறுமை
*  அல்லவை - பாவம்*  நன்றி - நன்மை
*  சிறுமை - துன்பம்
*  ஈன்றல் - தருதல், *  வனகொல் - கடுஞ்சொல்
*  கவர்தல் - நுகர்தல்.
*  உதுக்காண் - சற்றுத் தொலைவில் பார்
*  உப்பக்கம் - முதுகுப்பக்கம்
*  உம்பர் - மேலே

இதை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

7 comments:

 1. 172. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
  (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
  FOR THE RESPONDENTS
  To Dispense With
  MP(MD).1/2014 - DO -
  For Stay
  MP(MD).2/2014 - DO -
  For Direction
  MP(MD).3/2014 - DO -
  To vacate stay
  MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

  ReplyDelete
 2. 161 gu hearing varala 172 gu enge poi hearing varuma entha govt namala nala cheat pannuthu frds

  ReplyDelete
  Replies
  1. இவ்வழக்கிற்கு முன் உள்ள வழக்குகளின் நிலையை பொருத்தே இவ்வழக்கு Reach ஆகும். சில வழக்குகள் உடனுக்குடன் போய்விடும்.
   வரிசைப்பட்டியலை வைத்து தீர்மானிக்கமுடியாது. நல்லதையே நினைப்போம். முடிவு நல்லதாக அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பர்களே.

   Delete
 3. To vacate stay என்பது இவ்வழக்கைப்பொறுத்தவரையில் அரசு சார்பில் Stay ஐ விலக்கவேண்டி நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 4. Bc mbc adw list viturankala edu fist edutha 11500 pera or pudithakka edutha lista pls tel mee akilan vijay sir

  ReplyDelete
 5. முதுகலை தமிழாசிரியர்: முயன்று படித்தால் முதல் வெற்றி நமதே!

  முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
  வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

  சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

  தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
  தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
  .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

  மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 7 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

  இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் பலர் அவர்களில் சிலரின் கருத்துக்கள்....

  ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
  வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

  இந்திரா, சிதம்பரம்
  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  நிஹாத் பெங்களூர்.
  பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

  ரிஹானா , மேலூர் நெல்லை
  நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  தாமரை, திருவண்ணாமலை

  தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

  மஞ்சுளா, மயிலாடுதுறை
  நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது.
  நன்றி

  அருள்,திட்டக்குடி 9842197488
  சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி.
  இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.  ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம்
  தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும்

  நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா?
  கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேண் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.

  வெற்றி- 7373967635

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி