162 காலி பணியிடங்களுக்கு சிவில் நீதிபதிக்கான தேர்வு தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2014

162 காலி பணியிடங்களுக்கு சிவில் நீதிபதிக்கான தேர்வு தொடங்கியது.


டிஎன்பிஎஸ்சி தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 9,439 வக்கீல்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 1, நவம்பர் 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 35 மையங்களில் இத்தேர்வுதொடங்கியது. சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வக்கீல்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டி.என். பி.எஸ்.சி.தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர், பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில் சென்னையில் ஐகோர்ட் நீதிபதிகள் ‘திடீர்‘ ஆய்வு மேற்கொண்டனர். இத்தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில், வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ‘ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி