அரசு பணிக்கு 'வாக் - இன்' முறை: 1,727 டாக்டர் தேர்வு செய்ய முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

அரசு பணிக்கு 'வாக் - இன்' முறை: 1,727 டாக்டர் தேர்வு செய்ய முடிவு

அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள, 1,727 சிறப்பு பிரிவு உதவி டாக்டர் பணியிடங்கள், 'வாக் - இன்' என்ற நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள, 2,176 உதவி டாக்டர்கள் இடங்களை நிரப்ப, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், எழுத்து தேர்வு நடத்தியது. இதில், வெற்றி பெற்றோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி டாக்டர்கள் இடங்களை, 'வாக் - இன்' முறையில், தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு மருத்துவ நிலையங்களில், 36 சிறப்பு பிரிவுகளில், காலியாக உள்ள, 1,727 உதவி டாக்டர்கள் பயணியிடங்கள், 'வாக் - இன்' தேர்வு முறையில், நிரப்பப்பட உள்ளன. இதற்கு, டிச., 1ம் தேதிக்குள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி