கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்ததேர்வர்கள் 48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி குரூப் 2ல் அடங்கிய பதவிக்கான (நேர்காணல் பதவி) எழுத்து தேர்வு நடத்தியது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 11,497 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 300 பேருக்கு மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் ஏ.ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு முன்பாகவே 270 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். ஒரு அறையில் 56 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அப்போது, கம்ப்யூட் டர் சர்வர் குளறுபடியால் கேள்வித்தாள் வரவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.
இதே கல்லூரியில் மறு தேர்வு நடத்தப்படும் என பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். அதன்படி சட்டமங்கலத்தில் உள்ள பி.ஏ. பொறியியல் கல்லூரியில் 48 பேருக்கு நேற்று காலை மறு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் அனைவரும் உத்வேகமாக தேர்வு எழுத வந்தோம். ஆனால் இந்த பிரச்னையால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. தேர்வு நன்றாக எழுத முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தின்படி தேர்வு எழுதியுள்ளோம்’’ என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி