பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குமெட்ரோ ரயிலில் சுற்றுலா வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குமெட்ரோ ரயிலில் சுற்றுலா வசதி

மெட்ரோ ரயில் மூலம், சுற்றுலா செல்லும் வசதியை, மாணவர் குழுக்களுக்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்நிறுவன பொது மேலாளர் வசந்த் ராவ் கூறியதாவது:தேசிய அளவில், மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனாலும், பெங்களூருவில் துவங்கப்பட்ட, மெட்ரோ சேவை, மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்களுடன் துவங்கப்பட்ட, மெட்ரோ திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில், கைடுகள் துணையுடன், இரண்டு மணி நேர சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.இத்திட்டத்தில், 100 முதல், 120 மாணவர் அடங்கிய குழுவினர், சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு என, முறையே, 50, 75, 100 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பையப்பனஹள்ளியிலிருந்து, எம்.ஜி., ரோடு வரையிலும் அல்லது மந்த்ரி ஸ்கொயரிலிருந்து, பீன்யா வரையிலான மார்க்கங்களில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் இயக்கம், தினமும், மக்களுக்கு எந்த வகையில் சேவை செய்கிறது; பாதுகாப்பு முறைகள் எப்படி கையாளப்படுகிறது என்பதை, மாணவர்கள், நேரடியாக, சுற்றுலாவின் போது தெரிந்து கொள்ளலாம்.

பையப்பனஹள்ளியில் உள்ள மெட்ரோ டிப்போவுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, கைடுகள் விளக்கமளிப்பர். இந்த டிப்போவிலுள்ள அரங்கில், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு, 'கேள்வி - -பதில்' நிகழ்ச்சியின் மூலம் விளக்கம் பெறலாம்.மெட்ரோ ரயில் பயணத்தின்போது, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி