கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு


கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது.
தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக, பி.எஸ்.ஸி., பி.எட்., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எட். முடித்த குறைந்தபட்சம் 18 முதல் 57 வயது வரை உள்ளவர்களின் பதிவு மூப்புப் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் பதிவு மூப்புப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தகுதியானவர்கள் பார்த்துக்கொள்வது அவசியம்.

அதில், ஏதாவது குறைகள் இருக்குமானால், டிசம்பர் 12-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

இந்த நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தனித் தனியாக அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

21 comments:

 1. அனைத்து சகோதர சகோதரிக்கும்
  எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 2. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
  வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
  தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
  அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படித்து வெற்றிக்கனியை பறியுங்கள்! மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 8 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

  இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் பலர் அவர்களில் சிலரின் கருத்துக்கள்....

  ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
  வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள் இந்திரா, சிதம்பரம்
  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  நிஹாத் பெங்களூர்.
  பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

  ரிஹானா , மேலூர் நெல்லை
  நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  தாமரை, திருவண்ணாமலை
  தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

  மஞ்சுளா, மயிலாடுதுறை
  நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது.
  நன்றி

  அருள்,திட்டக்குடி 9842197488
  சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி.
  இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.

  ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம்
  தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும்


  சுகந்தி மத்தூர்
  நான் தேர்வுக்கு நன்கு தயாராகிவருகிறேன். தங்களின் வினாத்தாட்களைக் கொண்டு தேர்வெழுதி பார்த்தபின்தான் இன்னும் படிக்கவேண்டிய செய்திகள் அதிகம் உள்ளது என புரிந்துகொண்டேன். உங்களின் இந்த பணிக்கு எனது நன்றி

  இளமுருகன், செங்கம்.
  உங்களின் இந்த தேர்வுத்திட்டம் அருமை.பாடப்பொருளை நேரில் பெற்றுக்கொண்டேன். 4 தொகுதிகளாக பாடத்திட்டத்தை ஒட்டி தயாரித்தளித்திருப்பது சிறப்பு.

  டெல்பின், வேலூர்
  இன்று உங்களது பாடப்பொருள் கிடைத்தது.இது எனக்கு முன்பே கிடைத்திருந்தால் தேர்வுக்கு இன்னும் நன்கு தயாராகியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இன்றையிலிருந்து தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

  மலர் வேதாரண்யம்:
  பல இலக்கிய வரலாற்று நூல்களில் உள்ள செய்திகளின் தொகுப்போடு.,கூடுதலாக புதிய செய்திகள் இடம்பெற்றுள்ளது முக்கியமான செய்திகள் தொகுத்து தந்துள்ளது பாராட்டுக்குரியது

  நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா?
  கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
  வெற்றி- 7373967635


  குறைந்த நாட்களே உள்ளன..... நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்

  ReplyDelete
 3. சுந்தர வடிவேலு :

  பள்ளிக்கூடம் திறந்து விடலாம் ஆனால் மக்கள் பணம் கட்டி படிக்கதுக்கு மக்களுக்கு வசதி வேணுமே .. கல்வியை இலவசம் ஆக்கினால் ஓரளவு சாத்தியம் படுத்தலாம்..

  காமராஜர் :

  இதே யோசனை தான் எனக்குள் இருக்குன்னேன் .. கல்விக்கு காசு வாங்கிறது தாய் பால் விற்பதற்க்கு சமமானது ஆகுமே..

  சுந்தர வடிவேலு:

  அய்யா இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தினால் நிதி துறை மேலே பெரிய பளு இறங்கும்..

  காமராஜர் :

  இறங்கட்டுமே சுமப்போம் , விவசாயத்தை பெருக்குவோம் , தொழிலை வளர்ப்போம் , அதுல வருகிற வருமானத்தை கல்விக்காக செலவு பண்ணுவோம்.. யாருக்காக செலவு செய்யுறோம் நம்ம பிள்ளைகளுக்கு தானே .. அவங்க படித்து வந்தா போதாதா..
  அந்த இலவச கல்வித்திட்டத்தை உடனே சேர்த்து விடுங்கள் என்றார்..உடனடியே அந்த திட்டத்தை அமல் படுத்துங்க என்றார் ..

  ‪#கல்விக்கடவுள்‬ காமராஜர்

  ReplyDelete
 4. தந்தைக்கு...

  * தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

  * தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
  அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

  * தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

  * தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
  ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

  * தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
  அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

  * தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

  "தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
  முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
  பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.....!

  ReplyDelete
  Replies
  1. ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
   தந்தை சொல்கிறார்

   " என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.

   உடனே,மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".

   இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.

   நான் உங்கள் கையை பிடித்தால்,
   ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.

   நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

   Delete
 5. " ஆண் ... "

  >> ஆண் அழ தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்க தெரிந்தவன்.

  >> ஆண் , அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து , வார்த்தையில் வைக்க தெரியாதவன்...

  >> ஆண் வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்....

  >> ஆண் பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தை காப்பாற்ற ஓடுபவன்....

  >> ஆண் சிரிக்க தெரியாதவன் அல்ல. நேசிப்பவர் முன் குழந்தையாய் மாறுபவன்...

  >> ஆண் காதலை தேடுபவன் அல்ல. தன் வாழ்க்கையை ஒரு பெண்ணிடம் தேடுபவன்....

  >> ஆண் கரடுமுரடானவன் அல்ல. நடிக்கதெரியாமல் தன் கோபத்தை கொட்டிவிடுபன்....

  ( எனவே , இனி யாரும் , ஆண்களை திட்ட வேண்டாம் என்று , வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் )

  ReplyDelete
 6. எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை. யார் சிறந்தமனிதர்?
  காமராசரின் ஆட்சி காலம்:
  ................................................
  ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்த
  சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ்.
  அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.
  ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளை சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
  அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக்கூடாதென்று உணவும் அளிக்க திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!
  நிதிப்பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தை பிச்சைக்கார மாநிலமாக முன்னிருத்தினார்.
  ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்கார தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாக கொண்டு வந்து நிறுத்தினார்!

  ReplyDelete
 7. எழுந்திருங்கள் உறுதியுடனும்
  தைரியத்துடனும் இருங்கள்
  பொறுப்பு முழுவதையும்
  உங்கள் தோள்களிலேயே
  சுமந்து கொள்ளுங்கள்
  உங்கள் விதிக்கு
  நீங்களே காரணம் என்பதை புரிந்து
  கொள்ளுங்கள்

  சுவாமி விவேகானந்தர்

  ReplyDelete
 8. இன்பத்திலும் துன்பத்திலும்
  நாம் நினைவில் கொள்ள வேண்டியது
  ஒன்றே ஒன்று மட்டும் தான்

  இந்த நிமிடம்
  நிரந்தரமில்லை
  இதுவும் கடந்து போகும்

  ReplyDelete
 9. அருமை சகோதரா

  ReplyDelete
 10. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியது

  விரைவில் திருக்குறள் நூல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் பரிசாக வழங்கப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறும் படைப்புக்களும் பரவலாக அறிமுகப்படுத்தப்படும். திருவள்ளுவரின் பிறந்தநாள் இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்படும். அதே போல மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புக்கள் வட இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

  ReplyDelete
  Replies
  1. Summa iruntha puratchi panna aarampichuduvingale

   Delete
 11. Ipdyethan 3 months poiduchu nanpaa

  ReplyDelete
 12. நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்: அதிர்ச்சி சர்வே!

  Posted Date : 17:01 (29/11/2014)Last updated : 17:32 (29/11/2014)
  இந்திய அளவிலான `சர்வே` ஒன்றில் நான்கு பேரில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
  புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய சர்வே, இந்தியாவில் தீண்டாமை எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது.

  பிரிட்டிஷ் இந்தியாவை விட சுதந்திர இந்தியாவில் தீண்டாமையின் தீவிரம் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அரசுகளின் விழிப்புணர்வு பிரசாரம், தண்டனைச் சட்டம், கல்வி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் `தீண்டாமை என்பதே வேண்டாமே` என்ற மனோபாவம் கொண்ட தலைமுறைகள் தலையெடுத்தன.
  ஆனால் 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் NCAER என்ற தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு, இந்திய சமுதாயத்தின் பலவீனத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது எனலாம்.
  கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த சர்வே, பொது மக்களிடையே நேரடியாக எடுக்கப் பட்டுள்ளது.பொருளாதார அளவில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு தரப்பினரைக் கருத்தில் கொண்ட இந்த ஆய்வானது, இரண்டு கேள்விகளை முன் வைத்துள்ளது.
  அந்தக் கேள்விகள் உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என்பதே.

  இந்தக் கேள்விகளுக்கு சர்வேயில் பங்கெடுத்த பொது மக்களில் நான்கில் ஒருவர், தாங்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பதில்களின் முழு விவரம் 2015 ஆம் ஆண்டில் தொகுப்பாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக புள்ளி விபரங்கள் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.
  இந்தப் பிரிவில் பிராமணர்கள்,முன்னேறிய வகுப்பினர்,இதர பிற்படுத்தப் பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே போல மதங்களின் அடிப்படையில் மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் 17 சதவீதம் பேரும் தங்களது வசிப்பிடங்களில்,புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் தீண்டாமை உள்ளது என்று கூறி உள்ளன.
  இந்தப் பிரிவில் இந்து,முஸ்லீம்,கிறிஸ்துவம்,சீக்கியம்,பவுத்தம்,ஜைனம் ஆகிய மதத்தினர் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.


  பிராமணர்கள் 52 சதவீதம் பேரும் , முன்னேறிய சாதியினர் 24 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப் பட்டோரில் 33 சதவீதத்தினரும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்து மதத்தினர் 35 சதவீதத்தினரும்,ஜைன மதத்தினர் 30 சதவீதத்தினரும் சீக்கியர்களில் 23 சதவீதத்தினரும்,முஸ்லீம்களில் 18 சதவீதத்தினரும் தீண்டாமை, தங்களின் இல்லங்களில் இருப்பதை மறுக்காமல் கூறி உள்ளனர்.

  மாநிலவாரியாகப் பார்த்தால் ஹிந்தி பேசும் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதம்,உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதம்,இமாச்சலில் 50 சதவீதம், சத்தீஸ்கரில் 48 சதவீதம்,ராஜஸ்தான் பீகாரில் 47 சதவீதம்,உத்தரகாண்டில் 40 சதவீத மும் `தீண்டாமை` என்பது தங்களின் நிழல் போல ஒட்டிக் கொண்டுள்ளதை ஆய்வில் பதிலாக அளித்துள்ளனர்.
  தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கு வங்காளம 1 சதவீதம்,கேரளாவில் 2 சதவீதம் என்று சர்வே கூறுகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களின் நிலைமை பின்னர் வரவிருக்கும் விரிவான அறிக்கையில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" என்கிறார்.

  அதே நேரத்தில் கல்வி பெற்ற மக்களிடையே சாதியின் தாக்கம் குறைந்து, தேய்ந்து போய் உள்ளதையும் , பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் NCAER ஆய்வு சுட்டிக் காட்ட தவறவில்லை.

  தீண்டாமை யாரையும் `தீண்ட` வேண்டாமே....

  ReplyDelete
 13. 1 ) எங்களது பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்

  2 ) தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்

  3) அம்மாவின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றுள்ளோம்

  4) மதுரை சிறந்த வழங்கறிஞர் திரு லஜபதிராய் மூலம் நாங்களும் எங்களுக்கு எதிரான ராமர் கடலை மணி வழக்கில் இணைந்துள்ளோம்

  5) ஆதிதிராவிட நலத்துறை விரைந்து இப்பிரச்சனையை முடிக்க வலியுறுத்தியிருக்கிறோம்

  6) வழக்கிற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளோம்

  7) 1963 Go 405 adw and kallar நலத்துறை பற்றிய அனைத்து G 0 என்னிடம உள்ளது

  8) நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னிடம் உள்ளது ( தமிழக அரசின் )

  DEC 4 க்குள் வழக்குகள் தள்ளுபடி ஆகும் என்று உறுதியளித்துள்ளனர்

  அப்படி ஆகவில்லை எனில் DEC 4 தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் இப்பிரச்சனை ஓங்கி ஒலிக்கும்  இப்போது இதை உங்களிடம் கூற காரணம் சுருளி வேல் சகோதரர் மேல் உள்ள பாசம்

  எல்லோருடைய கூட்டு முயற்சியால் அவர் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது விரைவில் கிடைக்கும்

  ReplyDelete
 14. Hi Friend's I'm sc men candidates.I got 68 cutoff if any possibilities for adw list...

  ReplyDelete
 15. When will be the cases will come vijayakumar sir...
  is there any development on these cases?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி