பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது?

'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இன்றும், நாளையும், இணைய தளத்தில் இருந்து, விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

துறையின் அறிவிப்பு: சமீபத்தில், பிளஸ் 2 உடனடித் தேர்வு நடந்தது. தேர்வு முடிவிற்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு, விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, அவர்களின் விடைத்தாள் நகல், தீதீதீ.ண்tதஞீஞுணt.டண்ஞு14ணூtணூதி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், 5ம் தேதியும் (இன்று), 6ம் தேதியும், மேற்கண்ட இணையதளத்தில், பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், இதே இணையதளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 7ம் தேதி காலை முதல், 8ம் தேதி பகல் 1:00 மணிக்குள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உரிய கட்டணங்களையும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி