ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்வசூல் : புதிய நடைமுறை அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2014

ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்வசூல் : புதிய நடைமுறை அமல்


ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுபாட்டை விதித்ததுள்ளது. அதன்படி, ஒருவர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்கவோ, இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவோ அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுக்கவோ முடியும். இதற்கு கட்டணம் இல்லை.

ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கவோ அல்லது இருப்பு உள்ளிட்ட விவரங்களை அறியவோ ஏடிஎம்மை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 வசூலிக்கப்படும். மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். இது ஏற்கனவே 5 முறை இருந்தது. இந்த நடைமுறை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ, ஐதாரபாத் ஆகிய 6 நகரங்களில்நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள எஸ்பி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி