ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவியின் பள்ளி 'ஹோம் ஒர்க்' கிற்காக பேட்டி கொடுத்த மகாராஷ்ட்ரா புதிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அணுகுமுறை மும்பை பள்ளி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்று சில தினங்களே ஆகி உள்ளன.
பொதுவாக மாநில முதல்வராக இருக்கும் ஒருவரிடம் பல்வேறு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளை சேர்ந்த நிருபர்கள், தங்களுக்கென்று பிரத்யேக பேட்டி கேட்பதும், அவர்களது வேண்டுகோளை ஏற்று முதல்வராக இருப்பவர் வெவ்வேறு தருணங்களில் தனியாக பேட்டி கொடுப்பதும் புதிதானஒன்று அல்ல. அந்த வகையில் பட்னாவிஸும் தனது அரசியல் வாழ்வில் இதுபோன்ற பல்வேறு தருணங்களை எதிர்கொண்டிருப்பார்.ஆனால் மும்பை மலபார் ஹில் பகுதியை சேர்ந்த த்ரிஷ்டி ஹர்சந்த்ராய் என்ற 5 ஆம்வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், முதலமைச்சரான பட்னாவிஸை பேட்டி எடுத்து சக மாணவ, மாணவிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இங்குள்ள ஜே.பி. பெட்டிட் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயில்கிறார் த்ரிஷ்டி. அவருக்கு கொடுக்கப்பட்ட 'ஹோம் ஒர்க்' கில் ஒன்று முதல்வரை பேட்டியெடுப்பது. அதைக்கண்டு அவர் மலைக்கவில்லை.த்ரிஷ்டியின் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில்தான் தற்போது தங்கியுள்ளார் பட்னாவிஸ். இதனையறிந்து த்ரிஷ்டி, முதல்வரை பேட்டி எடுக்கும் நோக்கத்துடன் முதலில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த செக்யூரிட்டி அவரை உள்ளேயே விடவில்லை.இதனையடுத்து த்ரிஷ்டி, தனது பள்ளி நோட்டு புத்தகத்தின் ஒரு பக்கத்தாளை கிழித்து அதிலேயே, அவரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.அதில், " நான் உங்களை சந்திக்க வந்தபோது உங்களது பாதுகாவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
ஒருவேளை இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் எனது செல்போனில் என்னை அழையுங்கள். எனது பள்ளிக்காக உங்களது பேட்டி தேவை" என்று எழுதி தனது செல்போன் எண்ணையும், முகவரியையும் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.அந்த கடிதம் முதல்வர் பட்னாவிஸுக்கு கிடைக்க, அன்று மதியமே அவர் தனது பணியாளர் ஒருவரை அனுப்பி த்ரிஷ்டியை நேரில் வரவழைத்து, அவரது விருப்பப்படியே பேட்டி கொடுத்து, அம்மாணவியின் 'ஹோம் ஒர்க்' கை செய்து முடிக்க உதவி உள்ளார்.முதல்வரையே பேட்டி எடுத்த மாணவி த்ரிஷ்டியை கொண்டாடுகின்றனர் அவர் பயிலும் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும்!வ
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி