அரசு ஊழியர் 7,000 பேர் இன்று விடுப்பு போராட்டம்: வணிகவரி துறை பணிகள் முடங்கும் அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

அரசு ஊழியர் 7,000 பேர் இன்று விடுப்பு போராட்டம்: வணிகவரி துறை பணிகள் முடங்கும் அபாயம்

காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 7,000 அரசு ஊழியர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், வணிகவரி அலுவலகங்களின் செயல்பாடு, முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சட்டசபையில் அரசு அறிவித்தபடி, 4,500 தற்காலிக பணியிடங்கள், நிரந்தரப்படுத்த வேண்டும்; 50 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு குளறுபடிகளுக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, வணிகவரித் துறை சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அரசு கண்டு கொள்ளாததால், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (நவ., 18), ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், ஊழியர், அலுவலர்கள் தற்செயல் விடுப்பு கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து, கூட்டு நடவடிக்கைக்குழுவின் பொதுச் செயலர், ஜனார்த்தனன் கூறியதாவது: கடந்த ஆண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாட்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தினோம். அமைச்சர், உயரதிகாரிகள் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற, எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால், ஒரு நாளில் போராட்டத்தை முடித்துக் கொண்டோம். உறுதியளித்தபடி, அரசு நடந்து கொள்ளவில்லை. பலமுறை உயரதிகாரிகளைச் சந்தித்ததும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, வேறு வழியின்றி, இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பொதுமக்களும், வணிகர்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதன்படி, மாநிலம் முழுவதும், 7,000 பேர் விடுப்பு கேட்டு விண்ணப்பித்து, போராட்டத்தில் ஈடுபடுவதால், வணிகவரி அலுவலகங்களின் செயல்பாடு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, வணிகவரித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'இன்று பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி